மூளையில் ஏற்று...!
நண்பா...
விழுவதில் பழுதில்லை...
விழுந்தே கிடப்பதில்
அழகில்லை...
அழுவதை விட்டு விட்டு
எழுவதை எண்ணிப் பார்...
கானம் பாடும்
வானம் பாடி
என்றும் வருந்தி
அழுவதில்லை...
தேகம் தொடும்
தென்றல் காற்று
ஒரு தடைக்குள்
அடைவதில்லை...
பாய்ந்து வரும்
வெள்ளலைகள்
மாய்ந்து விடும்.. ஆனால்
ஓய்ந்து விடுவதில்லை...
வையம் பற்று
வாழ்வியல் போற்று
உன்னிலை நோக்கு
உயர்நிலை ஆக்கு
ஒளிரும் கண்களை
உன்னுள் காட்டு
முடியும் என்பதை
மூளையில் ஏற்று!
விழுவதில் பழுதில்லை
விழுந்தே கிடப்பதில்
அழகில்லை...!
நட்புடன்...
சூரிய விழி!