நல்ல நண்பனாய் இருப்போம்....!

தோழன் ஒருவன் துணை
இருந்தால் வாழ்வில் எத்தகைய
ஒரு துணிவும் எடுக்க
மனம் தயங்காது ....!

கடந்து வந்த வாழ்க்கையில்
ஒவ்வொரு மனிதனும்
பின்னோக்கி பார்த்தால் நண்பனின்
துணை புரியும் ....

ஒவ்வொரு மனிதனின்
வெற்றிக்கு பின்னால்
பெண் இருப்பாளோ இல்லையோ ?
நிச்சயம் நல்ல நண்பன் இருப்பான் ...!

நட்பு நம்பிக்கை தரும்
நட்பு நல்ல குணம் தரும்
நட்பு நன்மை தரும்
நட்பு அன்பை தரும்
நட்பு நல்ல மனிதனை தரும்
என்றும் நட்பு நல்ல
மனிதனாக்கும் ....!

நட்பின் துணை
இருந்தால் போதும்
தோல்வி கூட தோல்வி
காணும் நம்மிடத்தில் ...!

வாழ்வின் முக்கியம்
வாழ்க்கைத் துணையை விட
நல்ல நண்பன்
துணை போதும் ....

துயரத்தில் இருப்பவனையும்
தூக்கி விடுவான்
நண்பன் ...!

சந்தேகமற்றது நட்பு
உன்னிடத்தில் விட்டுக் கொடுக்கும் நட்பு
மற்றவரிடத்தில் உன்னை
விட்டுக் கொடுக்கததும் இதே நட்பு ...!

நல்ல நண்பனை நேசிப்போம்
நம் துயரம் எல்லாம் துடைப்போம்
நண்பனுக்கு துணையாய் இருப்போம்
நம்பிக்கையின் ஒளியாய் திகழ்வோம்
நண்பர்களே நம் வாழ்வின்
திருப்புமுனையாய்அமைய
நல்ல நண்பனாய் இருப்போம்....!

எழுதியவர் : கருணாநிதி .கா (21-Dec-12, 9:17 am)
பார்வை : 679

மேலே