கருணை பாலன்

வாழும் கலையில் நீர் யென்றும்
வான்னோக்கி வாழ்ந்து விட்டீரே!

அன்பு என்ற அண்டத்திலே நீர்
ஆழ கரைந்து விட்டீரே!

அன்பு என்ற அச்சாணி கொண்டு
இவ்வைய சக்கரத்தை சுழற்றிநீரோ!

கருணையின் மகுடத்தை உம்
சிந்தையில் கொண்டு பிறந்தீரோ!

இறைதன்மையால் நோய்கள் பல குணமாக்கி
இயற்கையின் மருத்துவனானீரோ!

இன்னல் கொண்டோரையெல்லாம்
இமயம் போல் பாதுகாத்தீர்.

உமை ஏசியவரிடமும் கூட அன்பா!
இதுவே உம் பண்பா!

நோன்பின் மகத்துவமும் ,மறுகன்னமும் போதித்து
மனிதனை மனிதனாக்கினீரே.

சுத்தம் சுதந்திரபட்டது ,அன்பு யுத்தம்
வெற்றி பெற்றது உம்மிடம்

உடல் விற்றவளிடம் கூட நீர்
மனம் விற்றீர்.
அன்பின் வியாபாரியே ,ஆழ்கடலே மீண்டும்
அன்பின் சுனாமி எப்போது?

சுமந்த சிலுவையின் பொருளின்றும்
தேவாலயங்களில் சிறகடித்து நிற்கிறதே!

மீண்டும் உயிர்தெழுந்திடும் இரகசியத்தை உம்
மௌன மொழியில் உறைத்திடுங்கள்.

இறை தூதரே! என்று நாங்கள் காண்போம் உமை
காத்திருக்கிறோம் இந்த டிசம்பரிலும் கூட...

எழுதியவர் : சுகந்த் (25-Dec-12, 12:56 am)
பார்வை : 99

மேலே