சுனாமி

கடலே,
நிலவதிர்ச்சிக்கு அஞ்சியா கரைகடந்து
சில மணித்துளி தஞ்சம் புகுந்தாய்
ஆழிபேரலையாய்?

கரை மணலில் அமர உனக்கும் ஆசையோ
கரைகடந்தாய் ஆழிபேரலையாய்.

எப்போதும் கால்கள் மட்டும் கழுவுவதாலோ
எங்கள் தலையையும் தொட்டுவிடவா எழுந்தாய்
ஆழிபேரலையாய்?

தரையில் ஆழிபேரலை எனும் வலை வீசி
அள்ளிவிட்டாய் மனிதர்களை.

எத்தனை முறை அலை அலையாய் கால்தொட்டுப் போனாலும்
உன்னை மன்னிக்கும் எண்ணம் இல்லை.

எழுதியவர் : (25-Dec-12, 12:36 am)
Tanglish : sunaami
பார்வை : 151

மேலே