விசுவரூபன்
![](https://eluthu.com/images/loading.gif)
மோசம் செய்து
அரசுகட்டிலைக்
கைப்பற்றிய
அரக்க மன்னனின்
ஆணவம் அடக்க
வாமனனாய் வந்தான்
மூன்றடி நிலம் கேட்டான்
தன் சிற்றடியால்
ஈந்தான் மன்னன்
ஈரடியால் விண்ணையும்
மண்ணையும் அளந்து நின்றான்
மூன்றம் அடிக்கு என் செய்வான் ?
தலைவணங்கி நின்றான் மன்னன்
வைத்தான் வலிய காலினை
விரிந்த வடிவெடுத்த வாமணன்
விழுந்தான் பாதாளத்தில் அரக்கன்
நின்றான் விசுவரூபனாய் இறைவன்
----கவின் சாரலன்