ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் கற்பனை சிறுகதை

ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

(கற்பனை சிறுகதை )

ஹலோ நீங்கள் யார் பேசுவது
நான் சிங்காரி பேசுகிறேன்

உடனே இவனின் மண்டைக்கு மேலே ஒரு
குண்டு பல்பு எரிகிறது போல் ஒரு பீலிங்க்ஸ்,,,,
கற்பனை மேகமூட்டத்தில் கலர் கலராய்
காட்சிகள் காண்கிறான்,,,,கடைசியாக ஒரு
கார்ட்டூனாகவே மாறிவிட்டான் போல் தெரிகிறது

சிங்காரி,,,,

சிங்கார மாகத்தான் இருக்கிறது பெயர்
காதுகளில் அவள் குரல் தொலைப்பேசி
வழி கேட்குபோதேல்லாம் கரென்ட்
அயரன் பாக்ஸ் ஷாக் அடித்து துடிப்பது
போலவே துடிக்கிறது இவன் அங்கம்
முழுவதும் இதயத்துடிப்போடு சேர்ந்து

இரவு பகல் பார்க்காமல் இணையதளத்திலும்
தொலை பேசியிலும் இன்னல் இடையூறுகளின்றி
இணைந்திருந்தார்கள்,,,"இச்ச்" கொட்டும் முத்தச்சத்தம்
கூட பக்கத்து செவுற்றில் உறங்குகின்ற பரங்கிக்காய்
தலையன் அப்பனின் காதுகளில் விழுந்து விட
கூடாதே என்பதில் அதிக அக்கறை காட்டிகொள்ள
மறக்கவில்லை,,,,ஆமாம் அவ்வளவு தெளிவு,,
அவ்வளவு தெளிவு,,,

காலேஜ் படிக்கும் ஸ்டூடன்ட் என்பதால்
கையில் கத்தை கத்தையாய் காகித ரூபாய்கள்
மதிப்பு கொடுக்கத்தெரியாத வயதில் வாட்டர்
பேக் சுமந்து செல்லவும் காஸ்ட்லி மோட்டார்
ஸ்கூட்டர்,,,

ஒரு நாள் கூட அவள் குரல் கேட்காமல் இருந்தால்
மரக்கட்டையாக மாறிவிடுகிறது இவனின் டியுப்லைட்
மண்டைக்குள் இருக்கும் மூளை எனப்படும் மசாலா
போண்டா,,,

அவள் சொல்லு என்பதற்கு முன்னாலேயே
முழுவதுமாய் அள்ளித்தெரித்து விடுகிறான்
போலிருக்கிறது கவிதையாய் அவனைப்பற்றிய
முழு விவரங்களையும்,,, அவளோடு

அவள் சொல்வதற்கு முன்பாகவே முந்திரிப்பழ
கொட்டை போல் மூக்கு வியர்ந்து முந்திக்கொண்டு
அவளின் பேங்க் அக்கௌண்ட் டீடைல்ஸ்களை
காலில் விழாத குறையாய் கெஞ்சி கேட்டு
வாங்கிவிடுகிறான்,,,பாருங்களேன்,,,

இவன் கைப்பணம் போனது மட்டுமில்லாமல்
கஷ்ட்டப்பட்டு கட்டமைப்பு இட்டு இராத்திரி
முழுவதும் யோசிக்கிறான் எப்படி அப்பனின்
முழு நீள டிரௌசர் பாக்கெட்டிலிருந்து
ஏ டி எம் அட்டையை ஆட்டையை போடுவதென்று

ஒரு புறம் பணமும் கரைய மறுபுறம் அரியர்ஸும்
குவிந்தது ஆனால் அவளை மட்டும் நேரில் பார்க்க
அனுமதி கிடைக்கவே இல்லை,,,

பாவம் அதற்கொன்றும் கட்டமைத்துவிட விட்டலாய்
தொங்கிக்கொண்டிருக்கும் இவனின் டியுப் லைட்
மண்டையின் மூளைக்கு பயிற்சி போதவில்லை போலும்,,,,

துணிந்தான் ,,எழுந்தான் ,,,எழுதினான்,,,
இமெயிலில்,,அவளை கண்டு விடுவதென்று
முழுத்தீர்மானத்தில்,,,

அன்பே சிங்காரி ,,, உனை ஒருமுறை
காண வேண்டும் கைகாரி,,இல்லையென்றால்
வயர் கொண்டு நான் தொங்குவது உறுதியடி
என் ஒய்யாரி,,, சாட்டையடியில் கூட
என் உடல் காயப்பட்டு வீங்கியதில்லை
துளி கண்ணீரும் சிந்தியதில்லை,,

ஒவ்வொரு முறை உன்னை காண
விழைந்து கொஞ்சும் போதெல்லாம்
உன்,,"இன்று இல்லை நாளை" என்னும்
பதில்களால் என் கண்கள் உறக்கமிழந்து
கன்னங்கள் வீங்கி கருத்துவிட்டேனடி
மைக்காரி

என்ன மைய்யடி என் உச்சி மண்டையில்
தேய்த்துச்சென்றாய் உறக்கமே இல்லாத
என் கணவுகளில் வந்து சண்டாளியே ,,,

சயனைட் சாப்பிடுவதை போல் சாவு
பீலிங்க்ஸ் வருகிறதடி உன்னோடு பேச
முடியாத நேரங்களில்

உன் பெயரை ஒருமுறை நினைக்கும்
பொழுதே கிறுகிறுத்து கீழே சாய்கிறேனடி
சதிகாரி ,,, தினம் உன் மடி மீது தலை
வைத்து விடிய விடிய பெனாத்துவதென்று
ஆசையடி என் நேசக்காரி

ஒக்கெனக்கால் வாட்டரும் ,,
எளிதாய் ஊடுறவி செல்லமுடியாத
என் தொண்டைக்குழிகள் இன்று ஏனோ
டாஸ்மாக் குவாட்டரையும் அசால்டாய்
உள்ளிழுக்கிறதடி நொடிப்பொழுதில்
எந்தவித எரிச்சலும் இல்லாமல்

என் தொண்டைக்குழி நீர் வற்றி போனதோடு
மட்டுமில்லாமல் என் பின் பாக்கெட்
பர்சுமல்லவா கனம் குறைந்து லேசாகிப்போனது

அப்பன் எப்போது பிடிப்பான் சிங்கிள் டைம்
சோற்றுக்கும் ஆப்பு எப்போது வைப்பான்
என்று ஏங்கி ஏங்கியே,, சொந்த வீட்டில்
கன்னக்கோல் வைக்கத் தொடங்கிவிட்டேனடி
உன்மேலுள்ள உயிர்க்காதலால்

கண்ணே ,,,தொட்டால் சுழற்றியடிக்கும்
இலெவன் கே வீ பஸ்பார் பெண்ணே,,,

கைப்பேசி பில்லும் ,,கட்ட முடியாமல்
காய்ந்ததடி என் வரும்படி உன்னால்,,
இணையதள இணைப்பும் இன்றோ
நாளையோ என்னை தனிமையிலாழ்த்திவிட்டு
உயிர்பிரிய போகிறது ,,,

உனை காண ஏங்கி ஆசைக்கொண்டு
கணபதி தியேட்டர் வாசலிலே
தினம்தோறும் காத்துக்கிடக்கும்
கபாலம் கலங்கிய கல்லூரிக்காதலன்
குசலகுமாரன்,,,,,

கம்பீரமாய் எழுதித்தள்ளிய
கண்ணீர் விசும்பல் குசும்புகளுடன்
படுக்கையில் தலை சாய்த்தான்,,
குசலகுமாரன்

பாவம் அவனுக்கே அறியாமல் வழிந்து விட்ட
கண்ணீரை ஒரு குடம் வைத்து ரெப்பிவிட
மறந்துவிட்டான் போல் தெரிகிறது
அறைமுழுவதும் உப்புக்கடல் தோரணை ,,,

அவனுக்கு புரியவில்லை அது செவுற்று
வழியாக ஊடுரவிச்சென்று வெளியே
இருப்பவர்களை பெரும் ஐயத்தில்
ஆழ்த்தியிருப்பதை,,,,

ஊற்று தண்ணீர் வருகிறதோ என்று
பார்ப்பதைப்போல் அதை பார்த்த
அனைவரும் லைன் லைனாக
குடம் கொண்டு வந்து நிற்கிறார்கள்,,,

தண்ணீர் பஞ்சம் தீர்க்கவாவது இவன்
கண்ணீரது உபயோகப்பட்டதே கடைசியில் ,,
வருங்கால சந்ததிகள் இவனைப்பற்றிய
சரித்திரத்தை பேசாமலா போய்விடுவார்கள்,,,

ஒரு பொழுதும் கலங்கி விடாதே குசலகுமாரா
நீ இப்படியே உன் காதலை கண்டினியு செய்,,

மறுநாள் எழுந்தான்,,,அடித்து மீதம் வைத்த
அரை குவாட்டரையும் பல்லு விளக்காமல்
ஒரு முடக்கில் விளாசிவிட்டு ,,டிராசிங்
டேபிள் கண்ணாடியில் சைடு பார்வையில்
ஒரு லுக்கை வீசினான் கலர்பட குடிகார
கதாநாயகன் போல் தன்னை பாவித்து
அதில் ஒரு பீலிங்க்ஸ் வேறு நன்றாகவே
இருந்தது ,,,

அப்படியே கணிப்பொறிக்கு உயிர் கொடுத்து
இன்டர்நெட் இணையதளத்தில் இதயத்தையும்
கண்களையும் ஆவலுடன் ஓடவிட்டான்
அவளின் பதிலஞ்சலுக்காக,,,

காத்திருந்த கண்களிலும் ,,காதல் கொண்ட
இதையத்திலும் பொக்ரான் அணுகுண்டு
ஜப்பானை தகர்த்தது என்ன பீலிங்க்ஸ்
அப்படியொரு பீலிங்க்ஸ் ,,

முடக்கப்பட்டிருக்கிறது இவனின்
மின்னஞ்சல் ஐடெண்டிபி கேசன்
இவனின் உயிர்க்காதலியால்,,,

உடனே உயிரிழப்பதை போல்
தாவினான் தொலைப்பேசியின்
திசைநோக்கி,,,அதுவரை அன்னை
தந்தையை யாரென்று கூட மறந்து
கெட்டவன் கைப்பேசி ரிசீவரை
கடவுளாய் அரைமணி நேரம் தொட்டு
கும்பிட்டு அவள் நம்பருக்கு
இணைப்பூட்டினான்

"நீங்கள் டயல் செய்யும் வாடிக்கையாளரின்
எண் தற்போது உபயோகத்தில் இல்லை "

இணைப்பூட்ட நினைத்த இவன் இதயம்
அவளுள் பூட்டிவிட்டதை தவிற இவனால்
இனி என்ன செய்ய இயலும்,,, அவளோ
கால் செருப்பாய் நினைத்து கழட்டிவிட்டு
சென்றுவிட்டாள் ,,,

இவனோ இதோ பாருங்களேன் கணபதி
தியேட்டரின் முன்னால் இருக்கும்
டாஸ்மாக்கில் தஞ்சம் புகுந்துவிட்டான்
ஒரு முழுநேர குத்தகைதாரனாய்,,,

வாகனங்கள் கிரீச்சிடும் சாலையில்
விழுந்து கிடக்கிறான் தன்னை மறந்தவனாய்
அவளை நேசித்தவனாய் ,,,

ரோட்டிலே செல்லுகின்ற பொதுஜனம்
எவனோ சொல்லுகிறான்,,, இவன் அன்னை
தந்தைக்கு அவன் சான்றிதழ் தர முயல்கிறான்

"தயவு செய்து சொல்லுங்கள் இவனின்
பெற்றோர்களிடம் இவனிங்கே விழுந்து
கிடக்கும் அவலக்காட்சியை குறித்து"
என்று

இல்லை இல்லை இவன் நண்பன் நான்
இவன் செய்தமைக்கு இதைக்கண்டு
கண்ணீர்விடும் தண்டனை இவனின்
பெற்றோர்களுக்கா ,,??? கூடாது
நான் பார்த்துக்கொள்கிறேன் என்றது
"ஒரு உண்மை நட்பு ,,,"

"கண்ணால் காண்பதும் பொய் காதால்
கேட்பது பொய் தீர விசாரிப்பதே மெய்
இளைஞர்களே"

"நில் கவனி பின் காதலி "

அனுசரன்,,,

எழுதியவர் : அனுசரன் (26-Dec-12, 3:24 am)
பார்வை : 694

மேலே