பெயர் இல்லாத அரிசி...

உனக்கான
ஒவ்வொரு அரிசியிலும்
உன் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது..
யாரோ சொன்னார்கள்...
ஆனால்
என் பெயர் மட்டும்
உன் நினைவிற்கு ஏனோ
வரவில்லையே...

ஆண்டவா...

எல்லோருக்கும்
ஆறடி நிலமாவது சொந்தம்
என்று தான் நினைத்தேன்
என்னை மட்டும்
ஏன்
அரை அடிக்குள்
புதைத்தாய்??...

வாழும் தகுதியை
இழந்தது
நான் அல்ல
என்னை
வாழ வைக்க வழியற்ற
இந்தச் சமூகம் தான்...

எழுதியவர் : கலாப்ரியன் (26-Dec-12, 5:25 pm)
Tanglish : peyar illatha arisi
பார்வை : 183

மேலே