ஏமாற்றம் !
கட்டிய கணவனால் வாழ்க்கையில்
ஏமாற்றம் !
பெற்றெடுத்த மகனால் அவன்
எதிர்காலத்திற்கு நான் கண்ட கனவுகள்
ஏமாற்றம் !
யாரெல்லாம் என் வியாபாரத்திற்கு
பக்க பலமாக இருப்பார்கள் என
நம்பினேனோ அவர்களால் என்
வியாபாரத்திற்கு ஏமாற்றம் !
நட்பு என்ற நம்பிக்கையில்
உடன் பிறவா சகோதரனாய் என்
உயிரோடு உயிராய் கலந்தவனால்
நம்பிக்கையில் ஏமாற்றம் !
இவை அனைத்தும் !
எதிபார்ப்பை குறைத்து கொண்டால்
ஏமாற்றங்கள் ஒன்றும் பெரிதல்ல வென்று
எனக்கு கற்றுகொடுத்த ஏமாற்றங்கள் !