எங்க ஊரு சங்கதி

வெள்ளாட்ட
வித்துபுட்டு
வெளியூரு போன புள்ள
வெள்ளைச்சாமி

இப்ப
வெள்ள வேட்டி சட்ட போட்டு
வீராப்பா நடந்து வரான்.............!

கஞ்சி தண்ணிய
குடிச்சு புட்டு
காட்டோட
கிடந்த பய
கருப்புசாமி

இப்ப
கட்டு கட்டா
காசோட
காரோட்டி ஊருக்கு வரான்............!

திக்கி திக்கி
பேசிகிட்டு
திரு திருன்னு
முழுச்ச பய
சின்னசாமி

இப்ப
எட்டுத்திக்கும்
அவன் புகழ் பாடா
பேச்சாளர்
அகிபுட்டான் .................!

இப்படி
உழைப்பாள
உயர்ந்தவங்க
எங்க ஊர்ல
பல பேரு ............!

அட
ஆயிரந்த
சொல்லப்பா
இன்னும்
"கூரைய பிச்சுகிட்டு குடுக்குமுன்னு "
இருக்காங்க
சில பேரு.........................!

எழுதியவர் : பா.கபிலன் (28-Dec-12, 8:59 pm)
பார்வை : 134

மேலே