உங்களுக்குத் தெரியுமா ?
எங்கள் தேசத்தாய்
தெருவில் நின்றுக்கொண்டிருந்தாள்!
"மாறுவேடமா அம்மா"
என்றேன்
"இல்லை"
'மக்களோடு மக்களாய்
எம்மைக்காணவா" என்றேன்
"இல்லை"
"உன் ராஜசபையை
வெளியில் நின்று பார்க்கவா"
என்றேன்
விசும்பினாள்
"என்னம்மா
நாங்கள் கண்கலங்கும் போது
நயமாக ரசித்துக் கொண்டிருந்தாயே
நீயுமா..........?"
என்றேன்
"தந்தி வந்தது"என்றாள்
"என்னது"
"என் கணவனின் மரணம்"
"யாரது,பேர் என்ன,
எங்கே,எப்போது?"
"ஜனநாயகம்....!
சமவுடைமை உறைக்குள்
முதலாளித்துவ ஈட்டியை
வைத்திருந்து அறுபது ஆன்டுகள்
குத்திக்கொண்று ஏகாதிபத்திய
பெட்டியில் அடைத்து
மறைத்து வைத்திருக்கிறார்களாம்"
"இவ்வளவு நாள் ஏது செய்தாய் ?"
"பேரினவாத போதையில் இருந்தேன்"
"இபோது .........?"
"ரத்தம் குடித்து
தெளிவித்துக்கொண்டேன்"
"கணவனைத் தேடினாயா?"
"ம்.......... அவருடைய எல்லா
வாசஸ்தலங்களிலும்
சேகுவேரா,மார்க்ஸ்,லெனின்
மாவோ என்ப்பலரும்
சுவற்றில்
சுருக்கிடப்பட்டிருக்கிறார்கள்
வெளியில்
அபாய சின்னமாக சிவப்புக்கொடிகள்!
தெறிக்கத் தெறிக்க ஓடினேன்
களைத்தும் விட்டது....!"
"இனி என்ன செய்யப்போகிறாய்..?"
நரமாமிசத்தில் வயிறு புடைத்து விட்டது
இனி
கலிங்க நாசத்தின் பின்
அசோகன் மாதிரி
புனித வதி ஆகப்போகிறேன்"
"அடடே....... எப்படி......!?"
"காவித்திரையில் மறைத்துக் கொண்டு....!"
"ஆ..........????"