நட்பு நதி

வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கிறது
நட்பு நதி
கரை இரண்டான நம்மை தொட்டபடி
வெள்ளிவிழாவைத் தாண்டி
வெற்றி நடைப்போட்டுக்கொண்டிருக்கும்
நமது நட்புக்கு
நரைக்கத் தொடங்கியிருக்கிறது.
ஆனால். . .
இதுவரை-
மனக்கசப்பேதுமில்லை.
காரணம்-
நாம் சண்டையிட்டுக்கொள்வதே
யார் முதலில் விட்டுக்கொடுப்பது
என்பதற்காகத்தானே!
பெருங்கால இடைவெளிக்கு பின்
நம்மை பார்ப்பவர்கள்
ஆச்சரியமாய் கேட்கிறார்கள்
"இன்னுமா நீங்க
ஒன்னா இருக்கீங்க?" என்று.
நமக்கு மட்டும் தெரியும்
நம் நட்பின் ஆயுளை
கூட்டுவதற்காக
நாம் எந்த சிரத்தையும்
எடுத்துக்கொள்வதில்லையே
உண்மையாய் இருத்தலைத்தவிர.

எழுதியவர் : -புதுவைப்பிரபா- (31-Dec-12, 7:46 am)
பார்வை : 374

மேலே