"இது யாருக்குமில்ல என் அன்பு நண்பனுக்கு மட்டும்"

"புத்தாண்டு பரிசு {01/01/2013}"

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=
காரணமின்றி கவிதை எழுத வந்த
என்னை, காரணத்தோடு கவி எழுத
காரணிகளை தேட காரணம் நீதானே..,
உன்னை காரணியாக்கி-ஒரு
அன்புக்கவி சொல்ல வந்தேனே..!
=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=
எப்ப நான் கவிதை எழுதினாலும்
என் தப்ப நீ தப்பாம சொல்வாய் நன்று,
என் வார்த்தையும் வாழ்க்கையும்
உன்னால் திருத்தம் பெற்றிருக்கிறது இன்று..!
=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=
கன்னிப்பெண்களுக்கு மட்டும்
கருத்தளிக்கும் மேதாவி கவிகள் மத்தில்,
கண்ணியமான ஒரு கவிதை
உன்கண்ணில் பட்டால் போதும்
உன் அன்பு கருத்து அங்கு அதுவாக போகும்..!
=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=
கற்றது கடுகளவாயினும்-அதை மெச்சும்
கூட்டம் உச்சமே இன்றைய நிலைமை,
கடலலவே கற்றாலும் தன்பட்டமதை
தம்பட்டம் அடிக்காமளிருப்பதே உன் பெருமை..!
=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=
மௌன வார்த்தை, மறத்தமிழ் வாழ்க்கை,
இலக்கணம் தெரியும், தலைக்கணம் இல்லை,
பொறுமை உண்டு, தற்பெருமை இல்லை.,
அவசர கோபம், சமத்துவ தாகம்,
இவையனைத்தும் நற்பண்புக்கூறு...
உன்னைவிட இதற்கு பொருத்தமிங்கு யாரு..!
=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*= *=*=*=*=*=*=*=*=*=*=
உன் இலக்கிய கவி -என்
மனதை இளக வைக்குமடா,
சமுதாய கவி, சமுதாய தாகத்தை
என்னுள் தைக்குமடா..!
=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=
மணிக்கொருமுறை பேசி பழகியும்
பிரிந்து செல்வதே இக்கால நட்பு..,
மாதம் ஒருமுறை பேசியும்-அன்பை
மட்டும் எதிர்நோக்கி காத்திருப்பதே
உன் நட்பின் சிறப்பு..!
=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=
என்னை நானெழுத இந்த
எழுத்து தந்த எழுத்தாணி நீ..,
என் எண்ணம் உன்னை தவிர
வேறெதையும் எழுதாதினி..!
=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=
என்றும் அன்புடன்
உன் அன்பிற்குரியவன்
-நா.சதிஷ்குமார்

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (31-Dec-12, 8:07 pm)
சேர்த்தது : நா சதீஸ்குமார்
பார்வை : 527

மேலே