நிவேதா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நிவேதா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 11-Jun-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 78 |
புள்ளி | : 3 |
நான் பொறியியல் படித்துக்கொண்டிருக்கும் மாணவி.தமிழ் இலக்கியத்தில் அதிக ஈடுபாடு உண்டு.கவிதைகள்,கதைகள் சிலவற்றை எழுதியுள்ளேன்.இளநிலை தமிழ் இலக்கியத்தை தொலைதூரக்கல்வி வாயிலாகப் படித்துவருகிறேன்.இலக்கியம் தவிர்த்து,வீணை,பரதநாட்டியம் ஆகிய கலைகளைக் கற்றுவருகிறேன்.ஓவியம் வரைவதிலும் நாட்டம் உண்டு.
"வானில் தோன்றும் கோலம்...அதை யார் போட்டதோ?
பனி வாடை வீசும் காற்றில் ...சுகம் யார் சேர்த்தோ?
வயதில் தோன்றிடும்...நினைவின் ஆனந்தம்...
வளர்ந்தாடுது...இசைபாடுது...
வழிந்தோடுது...சுவை கூடுது...
புத்தம் புது காலை..."
இப்படி ஆகாய பெருவெளியில்,வண்ண சிறகுகளைப் பரிசளித்து பறக்க செய்த பாடல்.ராஜாவின் இசை,ஜானகியின் குரல் என்பதை எல்லாம் தாண்டி இந்த பாட்டிற்கு இன்னொரு சிறப்பம்சம் இருந்தது.அது என்னவென்றால்,இது படப்பிடிக்கப் படாமக் இருந்தது தான்.காட்சிகள் தேடி நம் கற்பனை குதிரைகளை சுண்டி விட்டுக்கொண்டு பரவ (...)
அந்த ஆசிரியர் அன்று விடுப்பு எடுத்திருக்கலாம்!
நரம்பு மண்டலத்தில் குவிந்து கிடக்கும்
அத்தனை கோடி நியூரான்களும்
உன் இன்மையை உணர்ந்திருக்கின்றன!
மாதிரிகள் எதையும் அருகில் உணராததால்
என்னுடன் சேர்ந்து புடைத்து அழும் நரம்புகள்,
உன் இயல்பென நான் பாவித்த அணைத்து நிறங்களையும்
பிரதிபலிக்கும் அதிசயக் கண்ணீரில்,
ஒவ்வொரு நியூரானும் தனக்குப் பிடித்த
நிறத்தைத் தொடர ஆரம்பித்து விட்டது!
பேராசை பிடித்த சில நியூரான்கள்
பார்வைக்குப் புலப்படும் அத்தனை நிறங்களையும்,
தானே குறிக்க நினைத்து,
ஒன்றோடு ஒன்று சண்டை இட்டுக்கொன்டத்தில்
என் நரம்புகளெல்லாம் இன்னும் புடைத்தழுகின்றன!
உடலில் ஏதேனும் ஒரு பா
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒருநாள் தான் உள்ளது.விழாவிற்காக ஆடைகள் வாங்க வேண்டிய எண்ணம் நேரமின்மையின் காரணத்தால் நிறைவேற்றப் படாமலே இருந்தது.இன்று புத்தாடை பற்றிய பேச்சு தொடங்கியபோது, பொன்னி தனக்குப் பட்டுப்புடவை வேண்டுமென்று முதல்முதலாகக் கேட்டாள்.தங்கள் மகளுக்கு இருபது வயதாகிவிட்டதை எண்ணி காவேரியும் பார்த்திபனும் பூரிப்படைந்தனர்.இதைத் தொடர்ந்து,யாழினியும் அக்கா வாங்கும் சேலையின் நிறத்திலேயே தனக்கும் பட்டுப்பாவாடை வேண்டுமென்று கேட்கவே,தாங்கள் வழக்கமாக பட்டாடை வாங்கும் சேலை வியாபாரி சுந்தரம்,வீட்டிற்கு அழைக்கப்பட்டார்.
சுந்தரம் பரம்பரை பரம்பரையாக நெசவு செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர்.ஓவ
அந்த ஆசிரியர் அன்று விடுப்பு எடுத்திருக்கலாம்!
நரம்பு மண்டலத்தில் குவிந்து கிடக்கும்
அத்தனை கோடி நியூரான்களும்
உன் இன்மையை உணர்ந்திருக்கின்றன!
மாதிரிகள் எதையும் அருகில் உணராததால்
என்னுடன் சேர்ந்து புடைத்து அழும் நரம்புகள்,
உன் இயல்பென நான் பாவித்த அணைத்து நிறங்களையும்
பிரதிபலிக்கும் அதிசயக் கண்ணீரில்,
ஒவ்வொரு நியூரானும் தனக்குப் பிடித்த
நிறத்தைத் தொடர ஆரம்பித்து விட்டது!
பேராசை பிடித்த சில நியூரான்கள்
பார்வைக்குப் புலப்படும் அத்தனை நிறங்களையும்,
தானே குறிக்க நினைத்து,
ஒன்றோடு ஒன்று சண்டை இட்டுக்கொன்டத்தில்
என் நரம்புகளெல்லாம் இன்னும் புடைத்தழுகின்றன!
உடலில் ஏதேனும் ஒரு பா