எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"வானில் தோன்றும் கோலம்...அதை யார் போட்டதோ? பனி வாடை...

"வானில் தோன்றும் கோலம்...அதை யார் போட்டதோ?
பனி வாடை வீசும் காற்றில் ...சுகம் யார் சேர்த்தோ?
வயதில் தோன்றிடும்...நினைவின் ஆனந்தம்...
வளர்ந்தாடுது...இசைபாடுது...
வழிந்தோடுது...சுவை கூடுது...
புத்தம் புது காலை..."
இப்படி ஆகாய பெருவெளியில்,வண்ண சிறகுகளைப் பரிசளித்து பறக்க செய்த பாடல்.ராஜாவின் இசை,ஜானகியின் குரல் என்பதை எல்லாம் தாண்டி இந்த பாட்டிற்கு இன்னொரு சிறப்பம்சம் இருந்தது.அது என்னவென்றால்,இது படப்பிடிக்கப் படாமக் இருந்தது தான்.காட்சிகள் தேடி நம் கற்பனை குதிரைகளை சுண்டி விட்டுக்கொண்டு பரவிக்கிடந்த பாடல்.ஒவ்வொரு காலையும்,ஒவ்வொரு மழை துளியும்,வயதையும் மனதையும் பொருது,இந்த பாடலின் பின்னணியில் நம்மை நாயகிகள் ஆக்கிகொண்டிருந்தது.இந்த பாடலுக்கு சம்மந்தமே இல்லாமல் காட்சிகள் அமைத்து,இவை அனைத்திருக்கும் முற்றுப்புள்ளி வைத்தவர்களை என் மனதில் ஆழத்தில் இருந்து வெறுக்கிறேன்.இப்ப இதை படம் பிடிக்லைன்னு யார் அழுத?சொந்தமா பாட்டு எழுத முடியலனா எதுக்குயா படம் எடுக்குறீங்க?

பதிவு : நிவேதா
நாள் : 27-Oct-14, 7:40 pm

மேலே