இமயவரம்பன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : இமயவரம்பன் |
இடம் | : |
பிறந்த தேதி | : 20-Oct-1974 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Dec-2019 |
பார்த்தவர்கள் | : 794 |
புள்ளி | : 24 |
https://www.imayavaramban.com
பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியின் திருவுருவப்படம் - ஒரு பென்சில் ஓவியம்
எரிதிகழும் பார்வை எழுத்தினிலோர் ஏற்றம்
இருதயத்தில் பொங்கும் இரக்கம் - உருகவரும்
ஊக்கமிகு வாய்ச்சொல் முழங்கிடும்சீர்ப் பாரதியாம்
மாக்கவியை நெஞ்சமே வாழ்த்து.
வாழ்த்திப் புகழ்ந்திடுவோம் வாநெஞ்சே! வல்லறிஞர்
தாழ்த்தித் தலைவணங்கும் தார்த்தலைவன் - ஆழ்த்தி
அறங்கொல்லும் காலன் அரண்டோடச் செய்யும்
திறங்கொண்ட செல்வன் சிறப்பு.
சிறப்பன்றோ பாரதியின் செந்தமிழ்ப்பாட் டோசை,
சிறப்பன்றோ பாட்டின் தெளிவு, - சிறப்பன்றோ
சீர்கொண்ட பாட்டால் செவிமகிழச் செய்தவனின்
பார்போற்றும் தேசப் பணி.
பணிந்து நெடுந்துயரில் பாடுபட வேண்டாம்
துணிந்திங்கு உயர்த்திடுவோம் தோளை - இணைந்து
செயல்பட்டால் வாழ்வுஉயரும் என்றான
பாவேந்தரின் பாடல் ஒவ்வொன்றும் மடமை என்னும் காட்டை அழிக்கும் அக்கினிக் குஞ்சு; புதுமை என்னும் தென்றல் வீசும் செழுங்கவிதை; உலகின் இருளைக் கெடுக்கும் எழில் விளக்கு – இவ்வாறு பாவேந்தரின் கவிப்பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்தப் பதிவு புரட்சிக் கவிஞரின் நற்புகழை வெண்பாவில் சொல்ல நான் செய்த சிறு முயற்சி!
தோளை உயர்த்தித் தொடடாவவ் வானத்தை
வாளை உயர்த்தியிவ் வையங்கொள்! – மாளாத
புத்துலகம் காணப் புதுமறைசெய்! என்றறைந்தார்
முத்தமிழ்ப்பா வேந்தர் முரசு.
தமிழென்னும் வாளெடுத்துச் சாதிவேர் சாய்த்துச்
சமயச் சடங்கெதிர்த்துச் சாடி – இமயச்
சிகரம்போல் நின்றொளிரும் செந்தமிழ்ப்பா வேந்தர்
புகழ்கொள் ப

தைவரும் பொங்கல் நன்னாள் - இந்த
.....தரணியில் வளம்பல தந்திடும் நாள்!
செய்தொழில் சிறக்க வரும் - ஒளிச்
.....செங்கதிர் செல்வனைப் போற்றிடும் நாள்!
பொய்வளர் பழமையெல்லாம் - தீயில்
.....புகையுறப் போக்கிடும் புதுமையின் நாள்!
வையகம் வாழ்வதற்கே - எங்கும்
.....மணிக்கதிர் விளைப்பவர் உயர்ந்திடும் நாள்!
பொங்கலோ பொங்கலென்றே - இன்பம்
.....பொங்கிடக் குரலெடுத்து இசை முழங்க,
மங்கல மணிகள் கொண்டே - வண்டி
.....மாடுகள் அலங்கரித்து ஆடி வர,
சிங்கத்தின் திறல் உடையார் - இளந்
.....தீரர் வல்லேற்றினை வெற்றி கொள்ள,
எங்கும் ஓர் இன்ப வெள்ளம் - நெஞ்சில்
.....எழுந்திட வந்தது பொங்கல் அம்மா!
ஓதும் வார்த்தைகள் வையக மேதொழ,
வேத வார்த்தைகள் ஊருக் கருளினான்,
தீதில் வார்த்தைசொல் செல்வனைச் செப்பிட
ஏதும் வார்த்தைகள் இல்லையென் நாவிலே!