Vijayakumar - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Vijayakumar |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 13-Jan-2021 |
பார்த்தவர்கள் | : 48 |
புள்ளி | : 3 |
இதுவா கூட்டுக் குடும்பம்
நேரிசை வெண்பாக்கள்
பஞ்சாயத் தைகூட்டி நாட்டாமை கேட்டதற்கு
அஞ்சாது சொன்னா னவனுமே ---. வஞ்சி
யவளுடன் மாற்றாளைத் தொட்டேன் விடேன்பார்
தவறாக்காப் பேனென் றனன்
சட்டமில்லை குற்றந்தான் கள்ள உறவினால்
கட்டாத்தா லிப்பிள்ளை பெற்றனள் -- கட்டியவள்
தட்டிக்கேட் டுத்தடுத்தாள் அட்டில் நுழையவள்
விட்டுக்கொ டுப்பாளா சொல்
தொட்டு விடத்தொட் டுவிடத் தொடரும்கைப்
பட்டுவிடப் பட்டு மலருமாம் -- தட்டா
நடக்குதப்பா அந்தக் கவிஞர் வாக்கும்
இடக்குமடக்கு என்று மிருக்கு
நீதிமன்றம் போகா வழக்கும்பஞ் சாயத்தில்
தீர்ப்புக் கலைவதைப் பார்
...........
பாக்களும் ஓசைகளும்
(இன்னிசை வெண்பா)
செப்பலோசை தப்பாது செப்பமிடும் வெண்பாவில்;
துள்ளலோசை ஆசிரியத் துள்ளோடும்; தூங்கலோசை
வஞ்சியில் கொஞ்சிடும், வாஞ்சையொடு வாசித்துச்
சந்தக் கவிதை பழகு!
விஜயகுமார்
பினாங்கு, மலேசியா.
பாவேந்தரின் பாடல் ஒவ்வொன்றும் மடமை என்னும் காட்டை அழிக்கும் அக்கினிக் குஞ்சு; புதுமை என்னும் தென்றல் வீசும் செழுங்கவிதை; உலகின் இருளைக் கெடுக்கும் எழில் விளக்கு – இவ்வாறு பாவேந்தரின் கவிப்பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்தப் பதிவு புரட்சிக் கவிஞரின் நற்புகழை வெண்பாவில் சொல்ல நான் செய்த சிறு முயற்சி!
தோளை உயர்த்தித் தொடடாவவ் வானத்தை
வாளை உயர்த்தியிவ் வையங்கொள்! – மாளாத
புத்துலகம் காணப் புதுமறைசெய்! என்றறைந்தார்
முத்தமிழ்ப்பா வேந்தர் முரசு.
தமிழென்னும் வாளெடுத்துச் சாதிவேர் சாய்த்துச்
சமயச் சடங்கெதிர்த்துச் சாடி – இமயச்
சிகரம்போல் நின்றொளிரும் செந்தமிழ்ப்பா வேந்தர்
புகழ்கொள் ப
செங்கல்லினால் அல்ல
செங்காந்தள் பூவினால்
கல்லறை செய்க
காதலி மென்மையானவள்!
காதலுக்கு மூச்சிருந்தபோது
ஊரே தள்ளியிருந்தது;
மூச்சிழந்த பின்
உலகமே
வேடிக்கை பார்க்க வருகிறது!
தனக்குப் பிடிக்காதவனை - நீ
சமாதி என்பான்.
சமாதியான பின்
சாமி என்பான்.
கல்லறை என்பது
மாண்டவர்க்கு வைக்கும்
கிரீடமா?
வாழும் போது
அரையடி கூடத்
தன் பேரில் இல்லை;
இதோ
ஆறடி! - ஆனால்
ஆளத்தான் ஆளில்லை!
இந்த ஆறடி மட்டுந்தான்
வருமான வரி
தீண்டுவதில்லை!
காதலைக் கொன்று
கல்லறையைக் கொண்டாட வேண்டாம்!
பல்லாயிரம் பேர்களின் சுவாசம்
கல்லறையை மோப்பமிடுகிறது.
அவள்
கட
தண்ணெழிலே என்ற சீரைக் கொண்ட இதழகல்
காரிகை ....!!!
தண்டை சிலிர்க்கச் சலங்கை யிசையதன் தண்ணெழிலே
கண்ணே கனிச்சாறே காதற் சிலையே கலையழகே
எண்ணங் களிலே இனிதாய் நிறைந்த இளங்கிளியே
செண்டை யதிரத் தென்றலி லாடிச் சிரித்தனையே ! !
சியாமளா ராஜசேகர்
பொழிப்பெதுகை அமைந்த பஃறொடைவெண்பா ...!!!
எத்திக்கும் முன்னிற்கும் இத்தரணி யேவியக்கும்
முத்தமிழின் பேரழகு முத்தொளிரும் - நித்தம்
களைப்பகற்றும் கன்னலாம் கன்னித் தமிழே
இளமையா யென்று மெளிதாய் - வளமையாய்
முப்பாலில் பூத்திருக்கும் முப்போதும் நெஞ்சள்ளிச்
செப்பனிடும் வாழ்வெனச் செப்பு.
சியாமளா ராஜசேகர்
படைக்கலங்கள் பதறுமம்மா பாவையின்
பார்வைகனம் பார்க்கையிலே!
படைத்தவன் பத்துவிரல் உதறுமம்மா
பாராத நேர்த்தியிலே!
கொடுத்து வைத்த கண்கள்
குழந்தையெனச் சிரிக்குதடி;
தொடுத்து வைத்த கவிதைகள்
தொட்டாச் சுருங்கியடி!
ஆடை குறைக்கும் தேவை
அரங்கத்தில் தேவையில்லை,
மூடிய மடல்கள் கலைக்க
மலர்களென்(று) ஆவதில்லை!
சேலை சூடியும் நீவா
சீவனில் சிலிர்ப்புப்;
பாலைப் பழிக்கும் பொழிப்புத்,
தென்னகத்தின் தனிச்சிறப்பு!
பாவினத்தில் பாவலர் பாடாத
பூவினம் உண்டா?
வாவி நீரில் தரளும்
வாலை மலர்த்தண்டா?
அழகின் அழகென்று தலையில்
அலங