பொழிப்பெதுகை அமைந்த பஃறொடைவெண்பா

பொழிப்பெதுகை அமைந்த பஃறொடைவெண்பா ...!!!

எத்திக்கும் முன்னிற்கும் இத்தரணி யேவியக்கும்
முத்தமிழின் பேரழகு முத்தொளிரும் - நித்தம்
களைப்பகற்றும் கன்னலாம் கன்னித் தமிழே
இளமையா யென்று மெளிதாய் - வளமையாய்
முப்பாலில் பூத்திருக்கும் முப்போதும் நெஞ்சள்ளிச்
செப்பனிடும் வாழ்வெனச் செப்பு.

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Jan-21, 11:48 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 24

மேலே