தமிழ் கலாச்சாரங காக்கும் சட்டம் இயற்றவில்லை

தமிழ் கலாச்சாரங
காக்கும் சட்டம்
இயற்றவில்லை


அறுசீர் ஆசிரிய விருத்தம்

தமிழ்தமிழா தன்னுயிரை
தருவதாக நடிப்பனிவன்
தமிழர் காக்கான்

தமிழையும் முன்னிறுத்தி
தமிழகத்தை ஆண்டபலர்
செய்த தென்ன


தமிழ்பழக்கம் தவறெண்பான்
பகுத்தறிவுக் கெதிரென்பான்
சிரிக்க வைப்பன்


குழந்தையுடன் குடும்பத்தில்
இருந்தவளை கெடுத்திழுப்பன்
மரபைக் கொல்வன்

குடும்பத்தை தவிக்கவிட்டு
கொள்கையென்பர் விடலைகளை
அலைய விடுவான்

நல்லதொரு முன்னேற்றம்
நாட்டில்நாம் காணசட்டம்
இயற்ற மாட்டான்

அவள் பெற்ற துதவிக்க
அவன்பெற்ற தும்தவிக்க
இணைதல் முறையா

ஓடுகாலி தண்டிக்க
ஓர்சட்டம் இயற்றாத
தமிழ்நா டாமே

சுதந்திரம்பெற் றப்பெற்றோர்
புள்ளையைய னாதையாக்கி
திரிய விட்டார்

பெற்றப்பிள் ளைவீதியில்
நிற்கதியாய் நிற்கிறார்பார்
காப்பார் யாராம்

துருக்கர்சட் டம்பின்னே
துரைகளிட்டச் சட்டமுந்தான்
இன்னு மிங்கே

சமூகமுன்னேற் றமிதுவாசொல்
தமிழர்க லாச்சாரம்
மறைத்தாய் நீயே

எழுதியவர் : பழனிராஜன் (12-Jan-21, 10:29 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 354

மேலே