தமிழ் தாயே
தமிழே செந்தமிழே
எம்மை சீராட்டும்
நாவினிக்கும் நன்தமிழே
இனிய வளம் நாவினிலே,
சொல்லினமும் எழுத்தினமும்
சொக்குதுந்தன் மென்மையினால்
தமிழ் மயக்கம் தயக்கமின்றி
தாவி வரும் உள்ளமெங்கும்
உள்ளூற உள்ளூற இனிக்குதம்மா,
எவ்வெவரும் அடைந்திடா
ஞானம் எம்மிடையே மிளிருதம்மா
தமிழே தாயாக நீயிருக்க
தனிமையில்லை தமிழர்க்கு ,
தாயே, தமிழே தரம் தன்னில்
தனித்து நிற்கும், உயர்ந்து நிற்கும்
உன்னை என்ன சொல்லி பாராட்ட
உன்னாலே வாழுகின்றோம்
உன்னையே போற்றுகின்றோம்
தமிழே செந்தமிழே நாம் தலை நிமிர்ந்து
வாழுகின்றோம் தரணியிலே உன்னால்