பா வகைகளும் ஓசைகளும்
பாக்களும் ஓசைகளும்
(இன்னிசை வெண்பா)
செப்பலோசை தப்பாது செப்பமிடும் வெண்பாவில்;
துள்ளலோசை ஆசிரியத் துள்ளோடும்; தூங்கலோசை
வஞ்சியில் கொஞ்சிடும், வாஞ்சையொடு வாசித்துச்
சந்தக் கவிதை பழகு!
விஜயகுமார்
பினாங்கு, மலேசியா.