கல்லறைச் சுவாசம்

காதல் சுவாசம்
******** **********
படைத்தது எவனோ
பிறப்பில் மாறுபட்டோம்
அன்பில் கலந்தோம்
அரவனைத்தது காதல்

மதமும் சாதியும்
மறுத்தது காதலை
வெறுத்தோம் வாழ்வதற்கு
வேறுபட்டப் பூமியில்

ஒன்றுபடத் துணிந்தோம்
ஒன்றாக மரனித்தோம்
இறந்தப் பின்னும்
இரக்கமற்ற வெறிக்கூட்டம்

அவளைப் புதைத்து
என்னை எரித்தது
அதிலும் பிரித்தான்
ஆண்டவனும் கைவிரித்தான்

எரியூட்டியப் பின்
எழுந்தேன் புகையாக
காற்றோடுக் கலந்து-அவள்
கல்லறையைத் தேடுகிறேன்..

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவப்_புறா_ஞான_அ_பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவப் புறா ஞான.அ.பாக்ம (7-Feb-21, 7:55 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 97

மேலே