உன் கருவிழி பார்வைக்கு ஈடாகுமா 555

***உன் கருவிழி பார்வைக்கு ஈடாகுமா 555 ***


ப்ரியமானவளே...


வரப்பின் மீது நீ எனக்கு
முன்னே நீ நடந்து செல்ல...

உன்னை தொடர்ந்து
நானும் வர...

இரையை தேடி
பறவைகள் கூட்டம் அங்கங்கே...

ரசித்து கொண்டே
நீ செல்ல...

உன் பாதசுவட்டினை
ரசித்து கொண்டே...

என் பாதம் பதிக்க நித்தம் தொடர்ந்த
நம் பள்ளி பருவம்...

ஆற்று நாணலில் உனக்கு
முன்னே நான் சென்று...

திடீரென உன்முன்னே
நான் தோன்றினால்...

செல்ல கோபத்துடன்
சிணுங்கிக்கொண்டே...

கற்களை
என் மீது எறிவாய்...

வகுப்பறையில் நாம்
அமர்ந்திருந்தாலும்...

அடிக்கடி உன்னை நான்
திரும்பி பார்க்க...

நீயோ ஓரப்பார்வையால்
கள்ளத்தனமாக என்னை பார்ப்பாய்...

கரும்பலகை வெள்ளை
எழுத்தால் நிரம்பினாலும்...

உன் கருவிழி
பார்வைக்கு ஈடாகுமா...

என் வெள்ளைக்காகிதத்தில்
எத்தனைமுறை...

நீ நிரப்பி இருப்பாய்
வீட்டுப்பாடமாக...

அத்தனை பக்கத்திலும்
என் இதழ்கள் பதித்து...

முத்தமாக சேமித்து
வைத்திருக்கிறேன்...

இன்னும் உன் நினைவு
வரும் போதெல்லாம்...

உன் கைழுத்தை
ரசித்து பார்ப்பேன்...

சொல்லி கொள்ளாத
நம் காதலை நினைத்து.....


*** முதல் பூ பெ.மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (7-Feb-21, 8:59 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 519

மேலே