கடைசி சுவாசம்

செங்கல்லினால் அல்ல​
செங்காந்தள் பூவினால்
கல்லறை செய்க​
காதலி மென்மையானவள்!

காதலுக்கு மூச்சிருந்தபோது
ஊரே தள்ளியிருந்தது;
மூச்சிழந்த​ பின்
உலகமே
வேடிக்கை பார்க்க வருகிறது!

தனக்குப் பிடிக்காதவனை - நீ
சமாதி என்பான்.

சமாதியான பின்
சாமி என்பான்.

கல்லறை என்பது
மாண்டவர்க்கு வைக்கும்
கிரீடமா?

வாழும் போது
அரையடி கூடத்
தன் பேரில் இல்லை;

இதோ
ஆறடி! - ஆனால்
ஆளத்தான் ஆளில்லை!

இந்த​ ஆறடி மட்டுந்தான்
வருமான​ வரி
தீண்டுவதில்லை!

காதலைக் கொன்று
கல்லறையைக் கொண்டாட​ வேண்டாம்!

பல்லாயிரம் பேர்களின் சுவாசம்
கல்லறையை மோப்பமிடுகிறது.

அவள்
கடைசி சுவாசம் மட்டும்
காதுகளில் கேட்கிறது!

- விஜயகுமார்
பினாங்கு, மலேசியா

எழுதியவர் : விஜயகுமார், மலேசியா (5-Feb-21, 2:06 pm)
Tanglish : kadasi suvaasam
பார்வை : 176

மேலே