சங்கத்தமிழ் அழகி இன்று என்முன்னே

அச்சோ என்னென்பேன் அந்த காட்சியை
சொச்சம் ஏதுமில்லை கொள்ளை அழகு
மொத்தமாய் திரண்டு பெண்ணாய் உருவெடுத்து
என்முன்னே வந்து புன்னகைத்து சிரித்து
சதிராட அருகில் சென்றேன் நங்கையவள்
பேசினாள் அவள் பேச்சு தமிழ் தான் தெளிந்தேன்
ஆனால் அது சங்கத்தமிழ் எனக்கு புரியவில்லை
அவள் பின்னர் பாடினாள் பண்ணிசைத்து
சங்கத் பண்ணில் பாட்டின் அர்த்தம் புரியவில்லை
இசையோ தேனாய் காதில் வந்துமோத
இந்த நவீன உலகில் இந்த சங்கத்தமிழச்சி ??
அழகிய நங்கை யார் அவள்.......
அவள் ஒரு நாடகத்தின் ஒத்திகையில்
வரும் பெண்ணா...... இல்லை இல்லை
அவள் உண்மை சங்கத்தமிழச்சியே ..
இப்பிறவியில் போன பிறவியை மறந்திடா
சங்கத்தமிழ் அழகி அவள்....
ஒன்றும் தெரியாது நான் ......

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Feb-21, 2:10 pm)
பார்வை : 187

மேலே