நல்ல குடும்பம்
இதுவா கூட்டுக் குடும்பம்
நேரிசை வெண்பாக்கள்
பஞ்சாயத் தைகூட்டி நாட்டாமை கேட்டதற்கு
அஞ்சாது சொன்னா னவனுமே ---. வஞ்சி
யவளுடன் மாற்றாளைத் தொட்டேன் விடேன்பார்
தவறாக்காப் பேனென் றனன்
சட்டமில்லை குற்றந்தான் கள்ள உறவினால்
கட்டாத்தா லிப்பிள்ளை பெற்றனள் -- கட்டியவள்
தட்டிக்கேட் டுத்தடுத்தாள் அட்டில் நுழையவள்
விட்டுக்கொ டுப்பாளா சொல்
தொட்டு விடத்தொட் டுவிடத் தொடரும்கைப்
பட்டுவிடப் பட்டு மலருமாம் -- தட்டா
நடக்குதப்பா அந்தக் கவிஞர் வாக்கும்
இடக்குமடக்கு என்று மிருக்கு
நீதிமன்றம் போகா வழக்கும்பஞ் சாயத்தில்
தீர்ப்புக் கலைவதைப் பார்
...........