நடு நிசி
நடு நிசி
நகர்ந்து விட்ட
நாளொன்றின் மிச்சம்
இருந்த இருட்டு
மண்ணுக்குள் புதையுண்ட
மனித உடல்கள்
எழுந்து வந்து
நடமாடும் நேரம்
வதந்திதான் உள்
மனசு சொன்னாலும்
இருட்டை தனித்து
சந்திக்கும் நேரம்
நினைவுக்கு வந்து
நடுங்க வைக்கும்
அலறும் பறவைகளின்
குரல் கூட ஆழ் மனதில்
அச்சத்தை ஏற்றி விடும்
ஆழ்ந்து உறங்கும்
நேரம்தான் !
இயற்கையின் விளித்தலில்
இணைந்து கொண்டிருக்கும்
ஒரு சிலரும்
தேட்டையிட நோட்டம்
இட்டு
இடம் பெயரும்
கள்ளர்கள் சிலரும்
களவுகளை தடுத்து
விட சுற்றி சுற்றி
வந்து செல்லும்
காவலர்கள் சிலரும்
கண் முன் வண்ண
வண்ண கனவுகள்
காட்சிகளாய் விரிய
அதனுடனே பயணிக்கும்
ஆழமான உறக்கத்தில்
சிலரும்
மனித மெளனத்தில்
எல்லா அசைவுகளும்
அசையாமல் அமைதியாய்
இருந்தாலும்
உள்ளுக்குள் அமைதியற்றுத்தான்
இருக்கிறது