அர்ஜூன்ராஜ் ராச் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அர்ஜூன்ராஜ் ராச்
இடம்:  காஞ்சிபுரம்
பிறந்த தேதி :  04-Mar-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Jun-2020
பார்த்தவர்கள்:  11
புள்ளி:  0

என்னைப் பற்றி...

எழுதுதலும் எழுதல் நிமித்தமும் நான்.

என் Twitter ID @arjundreams43

என் படைப்புகள்
அர்ஜூன்ராஜ் ராச் செய்திகள்


காலையும் மாலையும்
தளர்வாடை அணிந்தபடி
வருகிறாள் 
ஒரு கையை தன் நெஞ்சின்
மறைப்புக்குக் கொடுக்கிறாள்
அவசரவசரமாக கூட்டி பெருக்கி 
சுத்தம் செய்கிறாள் வாசலை 
வீதியின் கண்கள் மீது அவள்
சுமத்திய குப்பைகளை அறிவாளா ?.

🔶🔶🔶

ஒவ்வொரு உயிர்
இறப்பின் இடைவெளியிலும்
சற்று மூச்சுவிட்டு ஆஸ்வாசமாகிறது
உள் நோயாளி வார்டிலிருக்கும்
படுக்கைகள்

🔶🔶🔶
மீன்கள்
விற்றுத்தீர்ந்ததும்
போணியானது
காகங்களின் பசி..!

🔶🔶🔶
நெடுஞ்சாலையில் ஒளிரும் மின்விளக்குகள்
இரவில் நட்சத்திரங்களை 
சிந்திக்கொண்டிருந்தது
பேருந்தின் 
ஜன்னல் கண்ணாடியில்
தன் இருப்பை கடத்தி
முகம் மலர்ந்துகொண்டிருந்தது
வானம்.
🔶🔶🔶
காதல் ஒரு
வளர்ப்புநோய்
அவள் கண்கள்
அதன் தொற்று.

🔶🔶🔶
வனமெங்கும் காதல் நிறமிகள்
அதில் நான்
வயப்படாமல்
காயும் வெண்ணிலா.

🔶🔶🔶
பழக்கப்பட்ட வழியில்
அவனை வீட்டுக்கு 
இழுத்துச்சென்றது போதை 
பின்தொடர்ந்தது 
மதுகுப்பியின் நிழல்

🔶🔶🔶

ராச்

மேலும்

அர்ஜூன்ராஜ் ராச் - தர்மராஜ் பெரியசாமி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Jan-2016 6:27 pm

இந்த வார ஆனந்த விகடனில் (கோவை பதிப்பு) எனது "விலகி நெருங்கும் பூனை" கவிதை வெளிவந்துள்ளதை 

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஆசிரியர் குழுவுக்கும், கவிதைத் தேர்வுக்குழுவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.


விலகி நெருங்கும் பூனை!
*************************************

வீட்டின் அருகேயுள்ள சிறு பூங்காவில்

மாலை நேர நடைப்பயிற்சி என் நெடுநாள் வழக்கம்.

அதைச் சுற்றிலுமுள்ள வேப்ப மர நிழலில்

யாரோ வைத்துவிட்டுச் சென்றிருந்த பிடி சோற்றுக்காக

ஆவலுடன் வந்த நிறைமாதக் கர்ப்பிணிப் பூனையொன்று

என் குறுக்கீட்டால் மருண்டு ஓடிவிட்டது.

சற்றுநேரம் மறைந்து பொறுத்திருந்து பார்த்தும்

அது திரும்பவே இல்லை.

இரவில் ’இன்னும் ஒரே ஒரு கை’ என

மனைவி என் தட்டில் உணவு வைத்தபோது

பூனை என்னை நெருங்குவது போலிருந்தது!


நன்றி : ஆனந்த விகடன்.

மேலும்

நன்றி தோழமையே... 10-Jan-2016 6:07 pm
நன்றி தோழர்.. மகிழ்ச்சி... 10-Jan-2016 6:07 pm
நன்றி தோழர்... 10-Jan-2016 6:06 pm
வாழ்த்துக்கள் தோழரே ! கவி மிக சிறப்புடன் ! 10-Jan-2016 7:10 am
அர்ஜூன்ராஜ் ராச் - அர்ஜூன்ராஜ் ராச் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Jun-2020 10:07 am

பழய செருப்பு:-

நானும் அந்த யாரோ ஒரு
பணக்காரனும்

அவன் கடைக்குள்ளும்
நான் கடைக்கு வெளியிலும்

உயர்ந்த விலையில் அவனும்
பேரம் மசியாத 
குறைந்த விலையில் 
நானும்

அன்று 
புதிதாக வாங்கினோம்
ஜோடி செருப்புகளை

அவரவர்
வீட்டுக்குச் செல்வதற்குள்
அவரவர் பாதங்களுக்கு தக்கபடி
தங்களை
உருமாற்றிக்கொண்டது 

என் செருப்பு
பகுதிவாழ் ஞமலியாக
மாறிப்போனது

அவன் காலணி
உயர்சாதி டாமியாக
மினுமினுத்தது

புதிதைகூட புதிதாகவே
வைத்திருக்க தெரியாத
ஏழைகள் 

எப்போதும்
புதிதாகவே தெரிகிறார்கள்
அவர்கள் அணிந்திருக்கும்
பழய செருப்பில்.

~ராச்

மேலும்

பழய செருப்பு:-

நானும் அந்த யாரோ ஒரு
பணக்காரனும்

அவன் கடைக்குள்ளும்
நான் கடைக்கு வெளியிலும்

உயர்ந்த விலையில் அவனும்
பேரம் மசியாத 
குறைந்த விலையில் 
நானும்

அன்று 
புதிதாக வாங்கினோம்
ஜோடி செருப்புகளை

அவரவர்
வீட்டுக்குச் செல்வதற்குள்
அவரவர் பாதங்களுக்கு தக்கபடி
தங்களை
உருமாற்றிக்கொண்டது 

என் செருப்பு
பகுதிவாழ் ஞமலியாக
மாறிப்போனது

அவன் காலணி
உயர்சாதி டாமியாக
மினுமினுத்தது

புதிதைகூட புதிதாகவே
வைத்திருக்க தெரியாத
ஏழைகள் 

எப்போதும்
புதிதாகவே தெரிகிறார்கள்
அவர்கள் அணிந்திருக்கும்
பழய செருப்பில்.

~ராச்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே