எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்த வார ஆனந்த விகடனில் (கோவை பதிப்பு) எனது...

இந்த வார ஆனந்த விகடனில் (கோவை பதிப்பு) எனது "விலகி நெருங்கும் பூனை" கவிதை வெளிவந்துள்ளதை 

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஆசிரியர் குழுவுக்கும், கவிதைத் தேர்வுக்குழுவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.


விலகி நெருங்கும் பூனை!
*************************************

வீட்டின் அருகேயுள்ள சிறு பூங்காவில்

மாலை நேர நடைப்பயிற்சி என் நெடுநாள் வழக்கம்.

அதைச் சுற்றிலுமுள்ள வேப்ப மர நிழலில்

யாரோ வைத்துவிட்டுச் சென்றிருந்த பிடி சோற்றுக்காக

ஆவலுடன் வந்த நிறைமாதக் கர்ப்பிணிப் பூனையொன்று

என் குறுக்கீட்டால் மருண்டு ஓடிவிட்டது.

சற்றுநேரம் மறைந்து பொறுத்திருந்து பார்த்தும்

அது திரும்பவே இல்லை.

இரவில் ’இன்னும் ஒரே ஒரு கை’ என

மனைவி என் தட்டில் உணவு வைத்தபோது

பூனை என்னை நெருங்குவது போலிருந்தது!


நன்றி : ஆனந்த விகடன்.

நாள் : 8-Jan-16, 6:27 pm

மேலே