எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காலையும் மாலையும் தளர்வாடை அணிந்தபடி வருகிறாள் ஒரு கையை...


காலையும் மாலையும்
தளர்வாடை அணிந்தபடி
வருகிறாள் 
ஒரு கையை தன் நெஞ்சின்
மறைப்புக்குக் கொடுக்கிறாள்
அவசரவசரமாக கூட்டி பெருக்கி 
சுத்தம் செய்கிறாள் வாசலை 
வீதியின் கண்கள் மீது அவள்
சுமத்திய குப்பைகளை அறிவாளா ?.

🔶🔶🔶

ஒவ்வொரு உயிர்
இறப்பின் இடைவெளியிலும்
சற்று மூச்சுவிட்டு ஆஸ்வாசமாகிறது
உள் நோயாளி வார்டிலிருக்கும்
படுக்கைகள்

🔶🔶🔶
மீன்கள்
விற்றுத்தீர்ந்ததும்
போணியானது
காகங்களின் பசி..!

🔶🔶🔶
நெடுஞ்சாலையில் ஒளிரும் மின்விளக்குகள்
இரவில் நட்சத்திரங்களை 
சிந்திக்கொண்டிருந்தது
பேருந்தின் 
ஜன்னல் கண்ணாடியில்
தன் இருப்பை கடத்தி
முகம் மலர்ந்துகொண்டிருந்தது
வானம்.
🔶🔶🔶
காதல் ஒரு
வளர்ப்புநோய்
அவள் கண்கள்
அதன் தொற்று.

🔶🔶🔶
வனமெங்கும் காதல் நிறமிகள்
அதில் நான்
வயப்படாமல்
காயும் வெண்ணிலா.

🔶🔶🔶
பழக்கப்பட்ட வழியில்
அவனை வீட்டுக்கு 
இழுத்துச்சென்றது போதை 
பின்தொடர்ந்தது 
மதுகுப்பியின் நிழல்

🔶🔶🔶

ராச்

நாள் : 21-Jul-20, 11:48 am

மேலே