பூபாலன் மு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பூபாலன் மு |
இடம் | : கன்னியாபட்டி |
பிறந்த தேதி | : 29-Jul-1998 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Feb-2020 |
பார்த்தவர்கள் | : 1477 |
புள்ளி | : 11 |
நிலை தேடி வழி போகிறேன் .........
நிலை எட்ட வலி ஏற்கிறேன்.......
நின் சிரிப்பலையில்
சிலிர்த்து போனேன்...
உன் சில்லுவண்டு பேச்சினிலே
இமை மூடாமல் திகைத்து போனேன்...
என் அருகில் நீ இருந்தால்
கடிகார நேரம் போதவில்லை...
உன் கண்ணக்குழி அழகிற்கு
இப்பாரினில் ஏதும் ஈடில்லை...
ஈசனும் தோற்று போவான்
வாயாடி உன் முன்னால்...
தேவியும் திகைத்து போவாள் கவிமகளே
உன் செயல்தன்னால்
புது விடியலை ரசிக்க...
நீந்தி நீராடுங்கள் எமதிரு விழிகளே..
இதுவரை கொண்ட கசடுகள் நீங்க..
கலக்கங்கள் கொண்டாவது இறுதியாக நீராடு...
வரவிருக்கும் விடியலை
சாதகமாய் சூட்ட..
கானல் நீரினை கண்ணீராய் விடுத்து
கம்பீரமாய் நீராடு..
சுமை விடுத்து
சுகம் பெற
இமைபுரண்டு செந்நீர் வர
கொதித்திருக்கும் சிந்தனைகள் சிணுங்க நீராடு...
சொட்டி சொட்டி
கொட்டி தீர்த்தாள்
சிரம் மடக்கி வானம் கண்டேன்
நெற்றி பொட்டினில் பட்டு
சட்டென தெரித்தாள்
அகண்ட ஆழி கண்டு
ஆயிரம் உயிர்களுக்கு தாயானவள்
ஆண்டுகள் கழிந்தும் அயராதவள்
கதிரவனால் காய்ந்து
வளியுடன் குடியேறி முகிலென
முகவரி கண்டவள்
வானம் குடி கண்டும்
தேவன் இடை மறித்து முத்தமிட்டதால்
முத்துக்காகளாக உதிர்ந்தது
வெள்ளமாக உருண்டு ஆழியிலே குலம் சேர்ந்தவள்
பாரினில் நிலை கெட்டவளாயினும்
தரணிக்கே தாகம் தணிக்கும்
தாய் எனும் முடி கொண்டவள்
வறண்ட மேகம் இங்கே பூக்கின்றதே
உன் சுவாசம் தீண்டியதால்..
புன்னகை தூரல்கள் வசந்தமாக
மலர்கிறது நின் முகம் கண்டதால்..
கதிரவனின் தாக்கம் கண்ட நிலையிலும்
என் அருகினில் உந்தன் மூச்சுக்காற்று
தென்றலாக படர்கின்றதே..
இப்படியே இந்த பயணம் தொடராதோ...
வாழ்வின் எல்லை வரை...
காலையிலையே கதிரவன் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்த நேரம்... கோடைகாலம் என்பதாலோ என்னவோ.... எட்டு மணிக்கே ஆதவன் அனலாக எரிந்து கொண்டிருந்தான்...
இருந்தும் என்ன பயன் .இளசுகளுக்கு அது ஒரு பொருட்டாக தெரியவில்லை..
பத்து பேர் கொண்ட இளம் கூட்டம் ஒன்று கோடையில் வறண்ட புழுதி காட்டில் விளையாண்டு கொண்டிருந்தனர்...
இவர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் காட்டு குயிலின் பாடல் அருகே அனாதையாக விடப்பட்ட விவசாய நிலத்தில் படரிக் கிடந்த கருவேல மரக்கூட்டத்தில் இருந்தது ஒலித்துக் கொண்டிருந்தது.....
புழுதி காட்டின் ஒருபக்கம், விளையாடும் சிறுவர்கள் கையில் கிடைத்த மூன்று கொம்புகளை அவசரமாக நட்டு வைத்திருந்தனர்.. மறுபக்கம