மாரிப் பூவே

சொட்டி சொட்டி
கொட்டி தீர்த்தாள்
சிரம் மடக்கி வானம் கண்டேன்
நெற்றி பொட்டினில் பட்டு
சட்டென தெரித்தாள்
அகண்ட ஆழி கண்டு
ஆயிரம் உயிர்களுக்கு தாயானவள்
ஆண்டுகள் கழிந்தும் அயராதவள்
கதிரவனால் காய்ந்து
வளியுடன் குடியேறி முகிலென
முகவரி கண்டவள்
வானம் குடி கண்டும்
தேவன் இடை மறித்து முத்தமிட்டதால்
முத்துக்காகளாக உதிர்ந்தது
வெள்ளமாக உருண்டு ஆழியிலே குலம் சேர்ந்தவள்
பாரினில் நிலை கெட்டவளாயினும்
தரணிக்கே தாகம் தணிக்கும்
தாய் எனும் முடி கொண்டவள்

எழுதியவர் : பூபாலன் மு (4-Feb-22, 6:03 pm)
சேர்த்தது : பூபாலன் மு
பார்வை : 108

மேலே