உன் உயிரில் கலந்திருப்பேன் 555

***உன் உயிரில் கலந்திருப்பேன்***


உயிரானவளே...


எத்தனை நாள்
இந்த மணற்பரப்பில்...

பாதம் பதித்திருப்பேன்
நான் தனிமையில்...

எத்தனை முறை இந்த அலைகள்
என்னை தொட வந்தாலும்...

பின்னோக்கி நான்
அடிவைத்திருப்பேன்...

இன்று என் கரம்பற்றி
ஒரு வெண்புறாவுடன்...

பாதம்
பதித்த சுவடுகள்...

அதே மணற்பரப்பில் அலையோடு
விளையாடலாம் என்கிறாய்...

உன் குழந்தை
மனம்கண்டு...

நான் உன்னை
அணைத்தது போல...

இந்த அலைகளும்
உன்னை அணைத்துக்கொண்டாள்...

கரையில் நான்
எப்படி தத்தளிப்பேன்...

படகு மறைவில் அமர்ந்து
முத்தம் வைக்க...

நான்
பகல் காதலன் இல்லை...

எந்நேரமும்
உயிரில் கலந்திருப்பேன்...

நான் உன்னை கட்டி தழுவி
மெல்ல அனைத்து...

உன்
கழுத்தோரத்தில் அழுத்தமாக...

முத்தம் பதிக்க வேண்டும்
காமம் இல்லாமல்...

என் மடியில் நீ
தலைசாய்த்து உறங்கவேண்டும்...

உன் செவிகளை
நான் மெல்ல வருடியபடி.....


***முதல் பூ .பெ .மணி .....

எழுதியவர் : முதல்பூ .பெ .மணி (4-Feb-22, 5:27 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 877

மேலே