ஏக்கம்

உன் முகத்தாமரை மலர்வதைக் கண்டதால்தான்
நான் சூரியனாய் இருக்கவும் பிரியப்பட்டேன்.
உன் முல்லைவிழி மொட்டவிழ்ந்ததால்தான்
நான் சந்திரனாய் இருப்பதிலும் பெருமைப்பட்டேன்.
நீ வாய்விட்டுச் சிரிப்பதற்காகத்தான் - நான்
கோமாளியாய் ஆவதிலும் ஆசைப்பட்டேன்.
என்னை கோமாளியாய் ஆக்கிவிட்டதற்காக - நீ
சிரித்துவிட்டால் நான் எங்கு போவேன்?

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (4-Feb-22, 7:14 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 125

மேலே