என்றென்றும் அவள் விழிகளில் - 1

காலையிலையே கதிரவன் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்த நேரம்... கோடைகாலம் என்பதாலோ என்னவோ.... எட்டு மணிக்கே ஆதவன் அனலாக எரிந்து கொண்டிருந்தான்...
இருந்தும் என்ன பயன் .இளசுகளுக்கு அது ஒரு பொருட்டாக தெரியவில்லை..
பத்து பேர் கொண்ட இளம் கூட்டம் ஒன்று கோடையில் வறண்ட புழுதி காட்டில் விளையாண்டு கொண்டிருந்தனர்...

இவர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் காட்டு குயிலின் பாடல் அருகே அனாதையாக விடப்பட்ட விவசாய நிலத்தில் படரிக் கிடந்த கருவேல மரக்கூட்டத்தில் இருந்தது ஒலித்துக் கொண்டிருந்தது.....
புழுதி காட்டின் ஒருபக்கம், விளையாடும் சிறுவர்கள் கையில் கிடைத்த மூன்று கொம்புகளை அவசரமாக நட்டு வைத்திருந்தனர்.. மறுபக்கமோ முளைக்குச்சி அடிக்க வைத்திருந்த ஒரு சிறிய பறையை வைத்திருந்தனர்...

புழுதி காட்டின் இந்த இடமோ சற்று இறுகி திடமாக இருந்ததால் அவர்கள் விளையாட ஏதுவாக இருந்தது... பறை இருந்த பக்கம் இருந்து ஒருவன் பந்து வீச மற்றொருவன் உருட்டு கட்டையால் பந்தை அடிக்க மீதமுள்ளவர்கள் ஆங்காங்கே பந்தை பிடிக்க நின்று கொண்டிருந்தனர்... ஆட்டத்தின் இறுதி பந்து போலும் அனைவரும் பரபரப்பாக நின்று கொண்டிருந்தனர்...

புழுதி கிளற ஒருவன் ஓடிவந்து பந்தை முழு வீச்சில் மூணு குச்சி நோக்கி குறி வைத்து வீசினான். வேகமாக வந்த அந்த பந்தை கண்ணை இறுக மூடிக்கிட்டு உருட்டு கட்டையை சுத்தினான் மறுபக்கம் கட்டையை வைத்திருந்தவன்... பந்து கட்டையில் பட்டு புழுதி காட்டின் வலப்பக்கமாக மேலே சென்று கொண்டிருந்தது....

பந்து சென்ற திசையை நோக்கி அனைவரும்அண்ணார்ந்து பாத்தபடி பந்து போற பக்கம் நின்றுகொண்டு இருந்த சிறுவனை டேய்... பந்த புடிச்சுட்டுடா...
உன்கிட்டதா.. வருது... டேய்... விட்டுராதடா... டேய்... என்று கத்தினர்...

கீழ் நோக்கி வந்துகொண்டு இருந்த பந்தை அண்ணாந்து பாத்துகிட்டே வெயிலின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும், இவர்களின் கூச்சலால் வேர்த்து வழிந்த நீரை ஒரு கையால் தொடைத்தபடி... மேலே வர்ற பந்த பாத்துக்கிட்டே கால்கள் தடுமாற பந்தை பிடிக்க தள்ளாடியபடி நின்று கொண்டிருந்தான்...

எழுதியவர் : பூபாலன் மு (27-Jan-22, 6:06 pm)
பார்வை : 330

மேலே