நீராடுங்கள்

புது விடியலை ரசிக்க...
நீந்தி நீராடுங்கள் எமதிரு விழிகளே..
இதுவரை கொண்ட கசடுகள் நீங்க..
கலக்கங்கள் கொண்டாவது இறுதியாக நீராடு...
வரவிருக்கும் விடியலை
சாதகமாய் சூட்ட..
கானல் நீரினை கண்ணீராய் விடுத்து
கம்பீரமாய் நீராடு..
சுமை விடுத்து
சுகம் பெற
இமைபுரண்டு செந்நீர் வர
கொதித்திருக்கும் சிந்தனைகள் சிணுங்க நீராடு...

எழுதியவர் : பூபாலன் மு (9-Feb-22, 9:34 am)
சேர்த்தது : பூபாலன் மு
பார்வை : 142

மேலே