Dhanabal T - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Dhanabal T |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 57 |
புள்ளி | : 7 |
நீ நடந்த பாதையின்
சுவடிருந்தால் போதும்
நான் நடந்த பாதையின்
வழி மறந்து போகும்
நீ பார்த்த பார்வைகள்
நினைவிருந்தால் போதும்
என் நிலவுக்கு கூட
புது நிறமொன்று தோன்றும்
நீ வாழும் உலகிலே
நான் வாழ்ந்தால் போதும்
நீங்காத உறவு இது
நீ மறக்க வேண்டாம்
மறுமுறை உன்னை
நான் பிரிய நேர்ந்தால்
மறு ஜென்மம் கூட
எனக்கு இங்கு வேண்டாம்!
காலம் பாதி போன பின்னே
காதல் சொல்வாளாம்
கண்கள் திறந்து பார்க்கும் முன்னே
விலகிச் செல்வாளாம்
பயணம் என்றும் உன்னுடன் என்று
சத்தியம் செய்வாளாம்
பின் பாதை மாறி வந்தேன் என்று
சங்கதி சொல்வாளாம்
உறங்கும் போதும் உன்னை மறவேன்
என்று சொல்வாளாம்
உயிரின் உயிரில் உள்ளே நின்று
உன்னை கொள்வாளாம்
கனவை திறக்கும் திறவுகோலாய்
கண்களில் திரிவாளாம்
கடமை ஒன்றை கண் முன் நிறுத்தி
கானலாய் போவாளாம்
பிரிவினில் வாடும் ஆண்கள் எல்லாம்
முரண்பாட்டுக் காரர்களாம்
பிரிந்து செல்லும் பெண்கள் எல்லாம்
முற்போக்கு வாதிகளாம்
அவளை பிரிந்து வாழ வழி இல்லாமல் இல்லை
ஆனால் மறக்க முடியாத மனசு தான் த
கவிதை எழுத திறமை வேண்டுமா?
பொறுமை கொள்
பொறுமை வளர்க்க திறமை வேண்டுமா?
காதல் கொள்
காதல் வளர்க்க திறமை வேண்டுமா ?
கற்பனை கொள்
கற்பனை வளர்க்க திறமை வேண்டுமா?
நேரத்தை விற்பனை கொள்.
அணையும் வாழ்வில் அணையா விளக்காய்
அன்னையின் அன்பு அழகு
வளரும் பருவில் வாழ்க்கையை உணர்த்தும்
தந்தையின் வளர்ப்பு அழகு
தன்நலன் போல் உன் நலன் பாவிக்கும்
உடன்பிறப்பின் அக்கறை அழகு
துயரத்திலும் தோல்வியிலும் தோள் கொடுக்கும்
தோழமையின் நட்பு அழகு
இயலாதோர்க்கு தன் இயலாமையிலும்
ஈதல் செய்யும் தனம் அழகு
துன்பங்கள் சூழ்ந்த போதும் துவளாமல் போராடும்
நேர்மையான குணம் அழகு
அனைவரின் நலனுக்கும் ஆண்டவனை பிரார்த்திக்கும்
அன்பு கொண்ட பக்தி அழகு
கை கூடா பொழுதிலும் கற்பனையில் வாழ்ந்திறக்கும்
கண்ணியம் கொண்ட காதல் அழகு