KAVIYARASU - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : KAVIYARASU |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 13-May-2018 |
பார்த்தவர்கள் | : 93 |
புள்ளி | : 9 |
ஆசைகள் உண்டு
ஆயினும் அருகில் இல்லை
தூரத்தில் உன்னை கண்டே
தனிஒரு இன்பம் கண்டேன்
ஆசைகள் உண்டு
ஆயினும் வார்த்தை இல்லை
ஊமை நான்இல்லை காதல்
உரைப்பதே இங்கே தொல்லை
ஆசைகள் உண்டு
உன்னுடன் உலகம் காண
தினமும் என் கனவில் கண்டேன்
தனிமையே உண்மை வாழ்வில்
ஒருநொடி போதும்
உன்னிடம் காதல் சொல்ல
ஆயினும் காத்திருந்தேன்
அதுவுமோர் இன்பம் தானே!!
அங்கே
தனியறையில் தனித்திருந்தோம்
தனியாக நின்றாளே
வாய்பேச வழியின்றி
விரல்பற்றி இழுத்தேனே
அருகிலே அமரவைத்தேன்
ஆசையாய்அவள் முகம்பார்த்தேன்
வெட்கத்தால் தலைகுனிந்தால்
வாரியே அனைத்தேனே
விடியும்வரை வண்ணக்கதை
விழியிரண்டில் வடித்துகாட்டி
இதழிரண்டில் இன்பதேனை
இனித்திடவே அள்ளித்தந்தால்
இன்றுவரை நானுலகில்
உண்ணாத உணவுயிது
முத்தத்தால் அள்ளிதந்தால்
மொத்தபசி போனதடி
அனைத்த கைவிடவில்லை
இரவெல்லாம் இன்பமயம்
இருள்நீக்க வந்தகதிரவன்தான்
இன்பத்தை நீக்கிவிட்டான்
நினைவெல்லாம் இரவைநோக்கி
நகர்ந்துபோ கதிரவனே
பால்நிலவே முகம்காட்டு
பாவையை அனைத்திருப்பேன்
நெடுநேரம் ஆகியும் மறையாமல்
இருக்கிறான் சூரியன்
பொழுதிருக்கும் போதே
உதயமாகிறான் சந்திரன்
இங்கே நானும் இருக்கிறே என
கண்சிமிட்டுகிறான் விடிவெள்ளி
இயற்கை மறந்தே
எட்டிபார்க்கிறான் மழைமேகம்
திசைகள் மறந்தே
சுற்றிவருகிறதி வீசம்காற்று
இத்தனை இயற்கை மாற்றத்தையும்
ஒன்றாய் காண்கிறேன்
பெண்ணே நீ வரும்போது
ரசிக்க தெரிந்தவனுக்கு
இயற்கை அழகனவும்
மங்கையின் உடலனவும்
கண்ணியின் விழியெனவும்
குளிர்ச்சி பனியெனவும்
ரசிக்க தெரியாதவனுக்கு
இரவு நேர காவலாளி
என்று தெரிகிறாள்