இதுவும் காதலே
ஆசைகள் உண்டு
ஆயினும் அருகில் இல்லை
தூரத்தில் உன்னை கண்டே
தனிஒரு இன்பம் கண்டேன்
ஆசைகள் உண்டு
ஆயினும் வார்த்தை இல்லை
ஊமை நான்இல்லை காதல்
உரைப்பதே இங்கே தொல்லை
ஆசைகள் உண்டு
உன்னுடன் உலகம் காண
தினமும் என் கனவில் கண்டேன்
தனிமையே உண்மை வாழ்வில்
ஒருநொடி போதும்
உன்னிடம் காதல் சொல்ல
ஆயினும் காத்திருந்தேன்
அதுவுமோர் இன்பம் தானே!!