பேரழகியோ என எண்ணுகின்ற

நீலக் கண்களால் ஒரு நேசப் பார்வை
நெடுங் கூந்தலில் மணக்கும் வாச மலர்கள்
புன்னகையால் செழித்த அழகு முகம்
உதட்டோரம் தோன்றிய கருஞ்சிவப்பு மச்சம்

பேரழகியோ என எண்ணுகின்ற பெருமை
கண்டவுடன் சிலிர்க்கச் செய்யும் உருவம்
கவிதைக்கு வார்த்தைத் தரும் கழுத்து
கண்ணை விட்டகலாத கட்டழகு

பெண்ணே நீ பிறப்பெடுத்த பெண்களில் மகுடம்
உன்னை விட சிறந்த அழகியை காணது இவ்வுலகம்
மெல்லிய இதயம் படைத்தோர் உனைக் காணின்
உள்ள உயிர் உருத் தெரியாமல் உருகுவது திண்ணம்
- - - நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (9-Jun-19, 6:32 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 213

மேலே