இயற்கையும் தனை மறக்கிறது

நெடுநேரம் ஆகியும் மறையாமல்
இருக்கிறான் சூரியன்

பொழுதிருக்கும் போதே
உதயமாகிறான் சந்திரன்

இங்கே நானும் இருக்கிறே என
கண்சிமிட்டுகிறான் விடிவெள்ளி

இயற்கை மறந்தே
எட்டிபார்க்கிறான் மழைமேகம்

திசைகள் மறந்தே
சுற்றிவருகிறதி வீசம்காற்று

இத்தனை இயற்கை மாற்றத்தையும்
ஒன்றாய் காண்கிறேன்
பெண்ணே நீ வரும்போது

எழுதியவர் : கவியரசு (26-May-18, 6:11 pm)
சேர்த்தது : KAVIYARASU
பார்வை : 37

மேலே