Manishakthi Kms - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Manishakthi Kms
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Mar-2015
பார்த்தவர்கள்:  44
புள்ளி:  0

என் படைப்புகள்
Manishakthi Kms செய்திகள்
Manishakthi Kms - சிவா (கர்ணன்) அளித்த மனுவை (public) பகிர்ந்துள்ளார்
22-Aug-2014 6:57 am

அனைவருக்கும் வணக்கம் !
ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் மனதின் குறைகளை சொல்லி ஆறுதல் தேட ஆலயத்திற்கு வருகிறார்கள் !

ஒரு கிறித்தவர் தேவாலயத்திற்கு செல்ல சிறப்பு நுழைவுச்சீட்டு வாங்குவதில்லை.

ஒரு இஸ்லாமியர் மசூதிக்கு செல்ல சிறப்பு நுழைவுச்சீட்டு வாங்குவதில்லை !

ஏனெனில் அங்கே ஏழைக்கும், பணக்காரனுக்கும் வேற்றுமை இல்லை !

ஒரு ஏழை இந்து தன் கடவுளை தரிசிக்க சிறப்பு நுழைவுச்சீட்டு வாங்காவிடில் நெடுநேர காத்திருந்து அவதிப்பட வேண்டி உள்ளது !

பணக்காரர் ஒருவர் சொல்கிறார், பணத்தை கொண்டு தான் இறைவ

மேலும்

ஆமாம் தோழி, உண்மை தான் ! தாங்கள் சொல்வதைப் போல, முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த சலுகை அறிவிக்கப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக அமையும் ! ஆலயத்தின் தூய்மை அங்கு வரும் பக்தர்கள் ஒத்துழைத்தால் மட்டுமே சாத்தியம் ! ;-) 27-Aug-2014 7:14 pm
முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோகளுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்படவேண்டும் அதுவும் இலவசமாக. மேலும் கோவில்களை தூய்மையாக வைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 27-Aug-2014 3:37 pm
Manishakthi Kms - விநாயகபாரதி.மு அளித்த மனுவை (public) பகிர்ந்துள்ளார்
01-May-2014 9:51 am

அரசு அலுவலகங்களில் ஆவணங்கள் பெறுவதற்கு அலைக்கழிக்க படுவதை தடுக்க தனி குழு அமைக்க பட வேண்டும் .

மேலும்

உங்கள் கருத்து வரவேற்க கூடியவை தான் தோழரே நீங்கள் சொல்வது சரியே இருப்பினும் அவர்கள் வேண்டும் வேலைகளுக்கு இருக்கும் கால அவகாசம் இது என்று சொல்லி விட்டு அவர்கள் அவசரப்படுகிறார்கள் என்பதற்க்காக பணம் கொடுத்தால் அந்த வேலை சீக்கிரமாக முடியும் என்ற ஒரு நம்பிக்கையை ஏன் அவர்களிடம் ஏற்படுத்துகிறர்கள் அது தவறு தானே. எதை கொடுத்தாலும் இது முடியாது என்று சொன்னால் அது மக்களிடம் ஒரு மாற்றத்தை உண்டாக்கும் தானே . அதற்காக மக்களையும் சரி என்று சொல்ல மாட்டேன் முதலில் மாற்றம் நம்மில் இருந்து தான் வர வேண்டும் . நன்றி தோழரே . 28-Jan-2019 12:20 pm
ஊழல் என்பது ஊழ் +அல். விதி அல்லாதது, சட்ட திட்டங்களுக்கு புறம்பானது என்று பொருள். ஆனால் சட்டப்படி அடிப்படை தேவைகளை, மின்சார இணைப்பு, குடி நீர் இணைப்பு, போன்ற விண்ணப்பங்களை செய்து முடிப்பதற்கு பணம் வாங்குவது ஊழல் அல்ல. அது அதிகாரத்தை கேவலப்படுத்தும் கயமைத்தனம். மக்கள் பணம் என்ற கருவியால் நடத்தும் ஜன நாயக கொடுமை. இது மாற தனி மனிதன் தன் சுய மரியாதை காக்க வேண்டும். ஒவ்வொரு வீடும் ஊரும் மாற வேண்டும். நான் மாறினால் நாடே மாறும். அரசு, அரசியல் வர்த்தகம் எல்லாமே ஒரு மனிதன் எண்ணத்தில் தோன்றுவதுதானே. மனிதா நீ கேள்வி கேள். உனது உரிமையை , ஓட்டை விற்காதே. உனது ஓட்டுக்கு நீ வாங்கும் காசு அதில் ஒரு சிறிய ஓட்டையை போடுகிறது. அந்த ஓட்டையை பெரிதாக்கி கோடி கோடியாக சம்பாதிக்க நீ வழி செய்து தருகிறாய். தவறு தனி மனிதன் செய்வதே. தனி மனிதன் மாற வேண்டும் என மனதிற்கு ஒவ்வொரு மனிதனும் மனு போடுங்கள். 19-Feb-2018 4:24 pm
எத்தனை குழுக்கள் வந்தாலும் அலைக்களிக்கப்படுவதையெல்லாம் தடுக்கு முடியாது. கொடுக்க வேண்டியதை கொடுத்தால் மட்டுமே நம் வேலை உரிய நேரத்தில் அதுவும் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு பிடித்த நேரத்திலேயே செய்யப்படுகிறது. இதற்கு யார் காரணம்? மக்களாகிய நாம் தான். ஏனெனில் ஆகாத பல விசயங்களை செய்யச் சொல்லி லஞ்சம் என்ற விசக்கிருமியை பரவச்செய்தது நாம் தானே. எனவே வாங்கிப் பழகிய கைகளுக்கு சும்மா செய்து கொடுக்க எப்படி மனம் வரும்? இதில் நம்மவர்களோ எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என் காரியம் ஆனால் போதும் சாமி என முந்திக்கொண்டு கொடுத்து சீக்கிரமாக என் வேலையை செய் என மறைமுறைகமாக கட்டளையை லஞ்சத்தால் சொல்கிறார்கள். தகவலறியும் உரிமைச்சட்டம் பயனுள்ள விசயமென்பதை மறுக்க இயலாது. ஆனால் அந்ந கேள்வியைக் கேட்டு அதற்கான ஆவணத்தை பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. எது எப்படியோ நாம் ஒட்டு மொத்தமாக கொடுக்க மாட்டோம் லஞ்சம் என அனைவரும் குரல் கொடுத்தால் மட்டுமே லஞ்சத்தை ஒழித்து அரசு அலுவலகங்களில் அலைகளிக்கப்படுவதைத் தடுக்க இயலும். ஆனால் அவ்வாறு யாரும் மாறப்போவதில்லை…………..ஏனெனில் எத்தனையோ அரசு அலுவலகங்ககளில் லஞ்சம் வாங்காமல் வேலைசெய்வதே முடியாத நிலையில் பலர் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. எனவே ஒட்டுமொத்த மக்கள் மாறவேண்டும் ஊழலை ஒழிக்க சபதமெடுக்கவேண்டும். இது நடந்தால் தான் பல வேலைகள் செய்ய வேண்டிய நேரத்தில் தானாக செய்வார்கள். எல்லோரும் மாறிட நாம் ஒன்றுபடும் காலம் எப்போது வரும் சொல்லுங்கள்? 09-Nov-2017 7:05 am
அதிகாரிகள் அவர்களது வேலையை சரியாக செய்தாலே போதுமே. மக்களும் இடைத்தரகர்கள் விடுத்து நேரடியாக அதிகாரிகளை சந்தித்து நேர்மையான முறையில் அவர்களது கோரிக்கைகளை மொழிந்தால் போதுமே. நன்றி, தமிழ் ப்ரியா... 24-Mar-2017 2:05 pm
கருத்துகள்

மேலே