சீறிடும் இதயம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சீறிடும் இதயம்
இடம்:  கிராமத்தான்
பிறந்த தேதி :  03-Jan-2004
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Nov-2021
பார்த்தவர்கள்:  22
புள்ளி:  2

என்னைப் பற்றி...

சிந்தையில் தோன்றியதை எழுதுகிறேன் தோழர்கள் நீங்கள் தான்.சரியா தவறா என கூறவேண்டும்...

என் படைப்புகள்
சீறிடும் இதயம் செய்திகள்
சீறிடும் இதயம் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2021 7:04 pm

நாணயம் உருவமாய்
நானிருந்தாலும்
உருவத்தில் பொறிக்கப்பட்ட
தலையாய் நீயே....

ஏனோ நீயும்
நானும் சேர்ந்தே செல்கிறோம்...

நாம் என்ன ''இராச ராச சோழனாரா''
நம்மை தவிர ஒவ்வொருவரும்
சொந்தம் கொண்டாடுகின்றனர்....

கலைக்கப்பட்ட சிலரது
வாழ்விலும் வசந்தமாய்
சென்று ''புன்னகையும்'' தருகிறோம்...

சிலநேரம் வசந்த காற்று
வீசிய இடத்தில் துக்க நிகழ்வாக
ஒட்டிக்கொள்கிறோம்
''நெற்றிக்காசாக''....

சிரிக்கத்தான் வேண்டும்..
சரி ஊர்க்கதை எதற்கம்மா....
உன்னுடன் நான் பேச....

நான் தங்கமாகவே இருந்தாலும்
என்னில் பதிக்கப்படும்
எண்ணிற்கே (உனக்கே) மதிப்பு.....

உரையாடி..உறவாடிவிட்டோம்...

வந்துவிட்டார் தொழிலாளி...
முதலாளி

மேலும்

சீறிடும் இதயம் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2021 3:24 pm

கருகி நிற்கும் கருவேலமாய்
தனியே நின்றேன்
ஆள் அருவமின்றி..
அனைத்துக் கொள்ள
நீ வந்தாய்...
கரிக்கட்டை என்றும் பாராமல்
கைத்தலம் பற்றினாய்..
காதல் ஊட்டினாய்
வெந்து தனிந்த
என்னில் விருட்சம்
மீண்டும் முளைவிடத்
தொடங்கியது...

சிற்சில பட்சியும்
பா இசைக்கும்
பாவலர்களும் என்னில்
உறைவிடம் தேடினர்..
எனக்கும் மதிப்பளித்தனர்...

இனி ஏமாற்றம்
என்னில் இல்லை என்றே
நினைத்தேன்...

ஏனோ... இடியை
திடீரென இறக்கி
மீண்டும் வாழ்வை
கருக்கிச் சென்றாய்...

எத்துனை ஆனந்தம் தான் உனக்கு....
என்னைப் பழிப்பதில்
உன் மனம் மணக்கும்
என்றால் நான்
வெந்து தணிய தயார்

மையலில் ஊறிய மனம்
எவரும்

மேலும்

கருத்துகள்

மேலே