கருக் கியது யாரோ

கருகி நிற்கும் கருவேலமாய்
தனியே நின்றேன்
ஆள் அருவமின்றி..
அனைத்துக் கொள்ள
நீ வந்தாய்...
கரிக்கட்டை என்றும் பாராமல்
கைத்தலம் பற்றினாய்..
காதல் ஊட்டினாய்
வெந்து தனிந்த
என்னில் விருட்சம்
மீண்டும் முளைவிடத்
தொடங்கியது...

சிற்சில பட்சியும்
பா இசைக்கும்
பாவலர்களும் என்னில்
உறைவிடம் தேடினர்..
எனக்கும் மதிப்பளித்தனர்...

இனி ஏமாற்றம்
என்னில் இல்லை என்றே
நினைத்தேன்...

ஏனோ... இடியை
திடீரென இறக்கி
மீண்டும் வாழ்வை
கருக்கிச் சென்றாய்...

எத்துனை ஆனந்தம் தான் உனக்கு....
என்னைப் பழிப்பதில்
உன் மனம் மணக்கும்
என்றால் நான்
வெந்து தணிய தயார்

மையலில் ஊறிய மனம்
எவரும் ஆக்கிரமிக்கும் வனம்...
இயற்கையே நான்
உன்னிடம் தான் நோவுகிறேன்
உன்னை மட்டும் தான் சாடுகிறேன்...

எழுதியவர் : சீறிடும் இதயம் (29-Nov-21, 3:24 pm)
சேர்த்தது : சீறிடும் இதயம்
பார்வை : 227

மேலே