மோசஸ் பிரான்சிஸ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மோசஸ் பிரான்சிஸ் |
இடம் | : திருச்சிராப்பள்ளி |
பிறந்த தேதி | : 02-Jan-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Apr-2017 |
பார்த்தவர்கள் | : 618 |
புள்ளி | : 29 |
அறிவியல் பட்டதாரி ஆசிரியர். தமிழார்வம் மிக்கவன்.
நினைவுகள் அழிவதில்லைதான்
நெஞ்சுக்குள் கல்வெட்டாய்.
நினைவுகள் நீந்துகின்றனதான்
கண்ணுக்குள் கருவட்டாய்
பல வண்ண நிறங்களில் பூத்துக் குலுங்கும் ஓர் அழகான பூஞ்சோலை. அதன் பக்கத்தில் மாங்காய்களும், தேங்காய்களும் தொங்கிக் கொண்டு ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும் மாந்தோப்பும், தென்னந்தோப்பும். இமைகளைத் திறந்து, மேல்நோக்கும்போது பறவைக் கூட்டங்கள் பாடிக்கொண்டிருக்கும் இசைக் கச்சேரி. இதற்கு ஜதி கூட்டுவதுபோல, ஓடையின் சலசலவென ஓசை. குளிர்ந்த காற்றை அணைக்க, சூரியன் தன் கிரணக்கைகளை நீட்டுகிறான். அடடா! அடடா! பார்ப்பதற்கும், கேட்பதற்கும் என்ன ஒரு ரம்மியமான நிகழ்வு. இதைக் கேட்கும்போது நம்மில் ஒவ்வொருவரும் தங்கள் மனதில் இதனை கண்டிப்பாக கற்பனைச் செய்திருப்பர்.
பாருங்கள்... இதில் நான் கூறிய அனைத்தும் தனித்தனிய
வெறுங்கண் அறியா ஒருசெல் உயிரும்
வாழும் நிலையினைக் காண்போம்.
துறுதுறு வெனவே சுற்றம் காத்திடும்
சுறுசுறுப் பெறும்புகள் காண்போம்.
நக்கிய நறவம் நலமுடன் சேர்த்திடும்
தூங்கா தும்பிகள் காண்போம்.
தக்கன தேர்ந்து தரணியில் இருத்திடும்
இயற்கையு மிங்கே காண்போம்.
ஒற்றை நோக்கு! ஒற்றுமை என்றும்
நற்றுணையாகி ஓம்பல் தரும்.
பிறப்பன யாவும் தனித்துவம் காக்க
புரட்சிகளிங்கே புரிந்தது புரியும்.
உறுகண் விடுத்து உறுதியாய் உழைக்கும்
உயிர்களென்றும் உச்சம் அடையும்.
இறந்திடும் வரைக்கும் இருப்பவை யெல்லாம்
ஈந்திடுதோறும்; நேயம் மலரும்.
இருட்டினை விரட்டிட கீழைக் கதிரோன்
துடிப்புடன் எழுவதும் புரட்ச
எங்கள்
பாவங்களைச் சுமந்த
பரமபிதாவே!
எங்களுக்காய்
இரத்தம் சிந்திய
இரட்சகனே!
இதோ
அறுசுவை உணவும்
அசைவ உணவும்
உங்களுக்காய்
படைக்கிறோம்.
ஏற்றுக் கொள்க - உடல்
தேற்றிக் கொள்க.
என்றென்றும் நீரே!
எங்கள் பாவங்களை சுமக்க வேண்டும்.
எங்களுக்காய் இரத்தம் சிந்த வேண்டும்.
எங்களுக்காய் நீர் இருக்க
நாங்களேன் துயரடைய வேண்டும்?
பாவங்கள் நிதம் புரிவோம் - நின்
பாதங்கள் தினம் பணிவோம்.
வழக்கம்போல் மன்னித்தருள்க.
பாவங்களைப் பொறுத்தருள்க.
"பொறுத்தார் பூமி ஆள்வார்!"
பிதாவே!
உன்மீதுள்ள நம்பிக்கையில்தான்
எங்கள் நாட்கள் நகர்கிறது
இருளுக்குள்...
எனது கவிதைகளை எழுதி எப்படி சமர்ப்பிப்பது ..புள்ளிகள் எப்படி பெறுவது