நம்பிக்கை

எங்கள்
பாவங்களைச் சுமந்த
பரமபிதாவே!
எங்களுக்காய்
இரத்தம் சிந்திய
இரட்சகனே!
இதோ
அறுசுவை உணவும்
அசைவ உணவும்
உங்களுக்காய்
படைக்கிறோம்.
ஏற்றுக் கொள்க - உடல்
தேற்றிக் கொள்க.

என்றென்றும் நீரே!
எங்கள் பாவங்களை சுமக்க வேண்டும்.
எங்களுக்காய் இரத்தம் சிந்த வேண்டும்.
எங்களுக்காய் நீர் இருக்க
நாங்களேன் துயரடைய வேண்டும்?

பாவங்கள் நிதம் புரிவோம் - நின்
பாதங்கள் தினம் பணிவோம்.
வழக்கம்போல் மன்னித்தருள்க.
பாவங்களைப் பொறுத்தருள்க.
"பொறுத்தார் பூமி ஆள்வார்!"

பிதாவே!
உன்மீதுள்ள நம்பிக்கையில்தான்
எங்கள் நாட்கள் நகர்கிறது
இருளுக்குள்...

எழுதியவர் : மோசஸ் பிரான்சிஸ் (16-Apr-17, 10:51 am)
சேர்த்தது : மோசஸ் பிரான்சிஸ்
Tanglish : nambikkai
பார்வை : 135

மேலே