பவித்ராகனகராஜ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பவித்ராகனகராஜ் |
இடம் | : Udumalpet |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-Sep-2021 |
பார்த்தவர்கள் | : 84 |
புள்ளி | : 22 |
என் கனவை நினைவாக்கத் துடிக்கும் ஒரே உயிர் என் கவிதை மட்டுமே....❣️
வாடிய
பயிரைக்
கண்ட போதெல்லாம்
வாடினார்
வள்ளலார்
ஆனால்
அந்த வாடிய
பயிரே
உன்னைக் கண்டு
பசுமையாய்
செழித்திட
அதைக் கண்டு
நானும்
ரசித்தேனடா...
அன்றோ
என்னுள் காதல்
மலர்ந்த
முதல் நாள்
குறுஞ்செய்திகள்
மூலம்
காதல் சொன்ன
அந்தத்
தருணம்
அதுவே
நான் உன் கரம்
பிடித்த
முதல் மற்றும் இறுதித்
தருணம்
உன்னைப் பற்றி
புரிந்த
நாட்கள்
அதுவே நீ
என்னைப் பற்றி
எனக்குப்
புரிய வைத்த
நாட்கள்
யாருக்கும்
தெரியாமல்
நான் உன்னை
ரசித்து
மாட்டிக்கொண்ட நாட்கள்
அதுவே
என் தூக்கத்தினை
நான்
தொலைத்த நாட்கள்
உந்தன்
ஒவ்வொரு
செயலையும்
ரசித்த அந்த நாள்
அதுவே
உன்னை நான்
எனக்குள்
முழுதாய்
இழுத்த
உன் கை
கோர்த்து நடக்கும்
பாதையில்
நம் கைவிரல்
பேசும் பாசையில்
மெய் மறந்து
உன் மீது
சாய்ந்து
என் காதலின்
இறுதி ஆயுளையும்
உன்னோடு
ரசிப்பேனடா
காதல் கள்வா...
❣️
காக்கிச் சட்டையின்
கள்ளத்தனமும்
வெள்ளைச் சட்டையின்
வெள்ளந்தியும்
கலர்ச் சட்டையின்
கலகலப்பும்
கருப்புச் சட்டையின்
காவியமும்
கலந்து
என்னைக்
கவரும்
காதல்
சட்டையை
மட்டும்
தைத்துக்கொண்டே.
இருக்கின்றேனடா
உன்னை எதிர் பார்த்து......
இரவின் தேடலில்
இவளின் இதயம்
என்ன தான் நினைக்கும் ...?
இல்லை
என்னைத் தான் நினைக்குமோ😍