காதல் கிறுக்கியின் கவிதைகள்

அன்றோ
என்னுள் காதல்
மலர்ந்த
முதல் நாள்

‌‌‌‌ குறுஞ்செய்திகள்
மூலம்
காதல் சொன்ன
அந்தத்
தருணம்

அதுவே
நான் உன் கரம்
பிடித்த
முதல் மற்றும் இறுதித்
தருணம்


உன்னைப் பற்றி
புரிந்த
நாட்கள்
அதுவே‌‌‌‌ நீ
என்னை‌ப் பற்றி
எனக்குப்
புரிய வைத்த
நாட்கள்


யாருக்கும்
தெரியாமல்
நான் உன்னை
ரசித்து
மாட்டிக்கொண்ட நாட்கள்

அதுவே
என் தூக்கத்தினை
நான்
தொலைத்த நாட்கள்

உந்தன்
ஒவ்வொரு
செயலையும்
‌ ரசித்த அந்த நாள்

அதுவே
உன்னை நான்
எனக்குள்
முழுதாய்
இழுத்த நாள்

உன்னோடு
என்னை
சேர்த்துக்
‌ கனவு கண்ட
நாட்கள்

யாவும் உன்னிடம் எந்தன் காதல் சொல்லத் துடித்த நாட்களாக

எண்ணி எண்ணி
எந்தன் இதயம் உன்னிடம் வந்து
சேரும் நேரம் பார்த்துக் காதலோடு காத்திருந்து இந்தக்
கவிதையை கிறுக்கினேனடா உனக்காக ....

எழுதியவர் : பவித்ராகனகராஜ் (30-Oct-21, 1:11 pm)
சேர்த்தது : பவித்ராகனகராஜ்
பார்வை : 125

மேலே