நீ எப்போது வருவாயோ

மழையே மழையே
நீ எங்கே! நீ எங்கே!
வானம் திறந்து - நீ
எப்போது வருவாயோ!
சிலையே சிலையே
நீ எங்கே! நீ எங்கே!
கல்லுக்குள் இருந்து - நீ
எப்போது வருவாயோ!
விதையே விதையே
நீ எங்கே! நீ எங்கே!
மண்துளைத்து முளைத்து - நீ
எப்போது வருவாயோ!
கவிதையே கவிதையே
நீ எங்கே! நீ எங்கே!
சிந்தைக்குள் இருந்து - நீ
எப்போது வருவாயோ!
நதியே நதியே
நீ எங்கே! நீ எங்கே!
கடலை சேர - நீ
எப்போது வருவாயோ!
காதலே காதலே
நீ எங்கே! நீ எங்கே!
அவளிடம் இருந்து - நீ
எப்போது வருவாயோ!