பிரதீப் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  பிரதீப்
இடம்:  குஜராத்
பிறந்த தேதி :  17-Feb-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Oct-2021
பார்த்தவர்கள்:  4
புள்ளி:  10

என்னைப் பற்றி...

எழுதவது என் பொழுது போக்கு. நான் விரும்புவது. எனக்கு பிடித்தது

என் படைப்புகள்
பிரதீப் செய்திகள்
பிரதீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2021 3:54 pm

நிலவே!
உன் அழகை காண
உன் அருகில்
மேகமாக இருக்க விரும்புகிறேன்.
மலரே!
உன் அழகை காண
உன் அருகில்
இலையாய் இருக்க விரும்புகிறேன்.
இரவே!
உன் அழகை காண
உன் அருகில்
நட்சத்திரமாய் இருக்க விரும்புகிறேன்.
கண்ணே!
உன் அழகை காண
உன் அருகில்
இமையாய் இருக்க விரும்புகிறேன்.
அழகே!
உன் அழகை காண
உன் அருகில்
காதலனாக இருக்க விரும்புகிறேன்.

மேலும்

பிரதீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2021 4:30 pm

எங்கிருந்து வந்தாயோ
எங்கே சென்றாயோ
ஒன்றும் தெரியவில்லையே
ஒன்றும் புரியவில்லையே
ஏ காதலே !
நீ ஆகாயத்திற்கு அப்பால்
இருந்து வந்தாயோ.
நீ ஆழியின் ஆழத்தில்
இருந்து வந்தாயோ.
பூவுக்குள் தேனைப்போல்
எனக்குள் நீ வந்தாய்.
தென்றலாய் தீண்டிவிட்டு
புயலாய் சென்றயே!
வாவில்லை உடைத்து
காட்டினால் வருவாயோ!
விண்மீன்களை பிடுங்கி
தந்தால் வருவாயோ!
கண்ணே கண்ணே
எங்கே போனாய்?
உன் கண்களுக்குள்
நான் காணாமல் போனேனே!

மேலும்

பிரதீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2021 4:51 pm

நீ தொலைவில் இருந்தால்
இதயம் எரிகிறது.
நீ அருகில் இருந்தால்
இமயம் உருகிறது.
நீ தொலைவில் இருந்தால்
தென்றல் சுடுகிறது.
நீ அருகில் இருந்தால்
புயலும் புன்சிரிக்கிறது.
நீ தொலைவில் இருந்தால்
இன்பங்கள் துன்பமாகிறது.
நீ அருகில் இருந்தால்
துன்பங்கள் இன்பமாகிறது.
நீ தொலைவில் இருந்தால் நான் தொலைந்து போகிறேன்.
நீ அருகில் இருந்தால்
உனக்குள் என்னை காண்கிறேன்.
கண் திறந்துப் பார்த்தால்
காண்பவையெல்லாம் உன் உருவம்.
கண் மூடிப் பார்த்தால்
நெஞ்சுக்குள் உன் உருவம்.
நீ நானாவதும்
நான் நீயாவதும்
காதலின் முதல் விதி!

மேலும்

பிரதீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Nov-2021 10:52 pm

இயற்கை தாயே!
வான் காகிதத்தில்
மேக ஓவியம் வரைந்தவளே.
தேனீக் கூட்டதுக்கு
தேன்திரட்ட உரைத்தவளே.
சோலை மலர்களுக்கு
பல வண்ணம் தீட்டியவளே.
காலை வானில்
இருளகற்ற தீ மூட்டியவளே.
தூக்கணாங்குருவி இல்லத்துக்கு
வடிவம் அமைத்து கொடுத்தவளே.
கொக்குக்கு உண்ண
மீன்பிடிக்க கற்றுக் கொடுத்தவளே.
வண்ணத்துப் பூச்சி இறகில்
மாயவண்ணம் பூசியவளே.
வெண்ணிலாவின் தேகத்தில்
வெள்ளி முலாம் பூசியவளே.
கடலுக்குள் உப்பை
கரைத்து வைத்தவளே.
உடலுக்குள் உயிரை
ஒளித்து வைத்தவளே
இயற்கை தாயே!

மேலும்

பிரதீப் - பிரதீப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2021 3:17 pm

மழையே மழையே
நீ எங்கே! நீ எங்கே!
வானம் திறந்து - நீ
எப்போது வருவாயோ!

சிலையே சிலையே
நீ எங்கே! நீ எங்கே!
கல்லுக்குள் இருந்து - நீ
எப்போது வருவாயோ!

விதையே விதையே
நீ எங்கே! நீ எங்கே!
மண்துளைத்து முளைத்து - நீ
எப்போது வருவாயோ!

கவிதையே கவிதையே
நீ எங்கே! நீ எங்கே!
சிந்தைக்குள் இருந்து - நீ
எப்போது வருவாயோ!

நதியே நதியே
நீ எங்கே! நீ எங்கே!
கடலை சேர - நீ
எப்போது வருவாயோ!


காதலே காதலே
நீ எங்கே! நீ எங்கே!
அவளிடம் இருந்து - நீ
எப்போது வருவாயோ!

மேலும்

பிரதீப் - பிரதீப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Oct-2021 3:17 pm

கடவுளை தேடினேன்
கடவுளை தேடினேன்
தூணிலும் தேடினேன்
துரும்பிலும் தேடினேன்
விண்ணிலும் தேடினேன்
மண்ணிலும் தேடினேன்
இரவிலும் தேடினேன்
பகலிலும் தேடினேன்
புனித இடங்களில் தேடினேன்
புனித நூல்களில் தேடினேன்
எங்கும் தேடினேன்
எதிலும் தேடினேன்
இறுதியில் கண்டு வணங்கினேன்
என் இதயத்தில்!!!🙏

மேலும்

பிரதீப் - பிரதீப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Oct-2021 10:26 pm

பாரத தாயை காக்கும் வீரன்
தீவிர வாதியை தாக்கும் வீரன்
தன் உயிர் கொடுக்க தயங்கா வீரன்
எதிரிகள் உயிர் எடுக்க துடிக்கும் வீரன்
பனியும் குளிரும் கண்டு அஞ்சா வீரன்
குனிந்து எவர் முன்னும் எதற்கும் கெஞ்சா வீரன்.
தேசிய கொடியை நிமிர்ந்து வணங்கும் வீரன்
தேசம் நினைத்து தன் குடும்பம் மறக்கும் வீரன்
ஆயுதம் தாங்கி நம்மை காக்கும் வீரன்
தேச பற்றில் முதன்மை வீரன்.
யுத்ததை முத்தமிடும் மாவீரன்
நித்தம் உன்னை வணங்குகிறேன் 🙏

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே