தேசிய வீரன்
பாரத தாயை காக்கும் வீரன்
தீவிர வாதியை தாக்கும் வீரன்
தன் உயிர் கொடுக்க தயங்கா வீரன்
எதிரிகள் உயிர் எடுக்க துடிக்கும் வீரன்
பனியும் குளிரும் கண்டு அஞ்சா வீரன்
குனிந்து எவர் முன்னும் எதற்கும் கெஞ்சா வீரன்.
தேசிய கொடியை நிமிர்ந்து வணங்கும் வீரன்
தேசம் நினைத்து தன் குடும்பம் மறக்கும் வீரன்
ஆயுதம் தாங்கி நம்மை காக்கும் வீரன்
தேச பற்றில் முதன்மை வீரன்.
யுத்ததை முத்தமிடும் மாவீரன்
நித்தம் உன்னை வணங்குகிறேன் 🙏